logo
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 200 பேர் வீடுகளில் சிகிச்சை

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 200 பேர் வீடுகளில் சிகிச்சை

23/Oct/2020 08:36:00

ஈரோடு மாவட்டத்தில் கோரானா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.தினமும் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனால் பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி அரசு ஆஸ்பத்திரிகளில் தனியார் மண்டபங்கள் கல்வி நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் தினமும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.இதில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் ஸ்கிரீனிங் மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களுக்கு ஐந்து வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் அறிகுறி இல்லாமல் வருபவர்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் மிக விரைவில் குணமடைந்து வருகின்றனர்.

அவர்களை கண்காணிக்க அந்தந்த பகுதி நர்சுகள் தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் சம்பந்தப்பட்டவரின் வீடுகளுக்குச் சென்று மருத்துவ உதவியை செய்து வருகின்றனர்.சுகாதார துறையினர் தி னமும் தொலைபேசி மூலம் அவர்களை தொடர்புகொண்டு கண்காணித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் 200 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


Top