logo
புதுக்கோட்டையில்  ரோட்டரி சங்கங்கள், காவல்துறை சார்பில் முகக்கவச விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டையில் ரோட்டரி சங்கங்கள், காவல்துறை சார்பில் முகக்கவச விழிப்புணர்வு முகாம்

09/Oct/2020 10:27:11

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கமும், திருப்பூர் ஆனந்தம் ரோட்டரி சங்கமும், புதுக்கோட்டை நகர காவல்துறையும் இணைந்து  இன்று (9.10.2020)  நடத்திய முகக்கவச விழிப்புணர்வு முகாமுக்கு புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர்  மதிவாணன் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்டம் 3000 -த்தின் ஆளுநர் அ.லெ.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.

புதுக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர். பாலாஜி சரவணன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசுகையில், முககவசத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும், சமூக இடைவெளி குறித்தும், கைகழுவுதல் முறைகள் பற்றியும் விளக்கி பேசினார். மேலும், எவ்வாறு ஆவிபிடிப்பது எப்படி என்ற செயல் விளக்கம் செய்து காண்பித்தார்.

நகர உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார், புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஜஹாங்கிர் பாஷா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர்  பஷீர் முகமது, ரோட்டரி துணை ஆளுநர்கள் கிருஷ்ணமூர்த்தி, முருகானந்தம், நகர காவல்துறை ஆய்வாளர் செல்வி, நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்பிரமணியம், நகர காவல்துறை, தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் மெய்யப்பன், உதவி ஆய்வாளர் பிரகாஷ், முன்னாள் தலைவர் ஜெய்பார்த்தீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையொட்டி, அவ்வழியாக சாலையில் வந்த அனைவருக்கும் முககவசம் மற்றும் கைகழுவும் திரவம் பற்றிய விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் கபசுர குடிநீர் மற்றும் முககவசங்கள் வழங்கப்பட்டது. சிலருக்கு கோவிட் பரிசோதனையும் செய்யப்பட்டது.

 ஏற்பாடுகளை புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தினரும், திருப்பூர் ஆனந்தம் ரோட்டரி சங்கத்தினரும், புதுக்கோட்டை நகர காவல்துறையினரும் செய்திருந்தனர். நிறைவில் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் செயலாளர் கோபிநாத் நன்றி கூறினார். 


Top