logo
மொடக்குறிச்சி அருகே ஆன்லைன் மூலம் பயில 10 மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்கள்

மொடக்குறிச்சி அருகே ஆன்லைன் மூலம் பயில 10 மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்கள்

08/Oct/2020 05:09:58

ஈரோடு கொரோனா  வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 7 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. மாணவ மாணவிகளின் கல்வித் திறன் பாதிக்காத வகையில் கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆன்லைன் வகுப்புக்கு  ஸ்மார்ட் போன்கள் இன்றியமையாததாக உள்ளது. வசதி உள்ளவர்கள், ஓரளவு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது பிள்ளைகளுக்கு ஸ்மார்ட்போன்கள் வாங்கி கொடுக்கின்றனர்.

அதன் மூலம், மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்களை கற்று வருகின்றனர். ஆனால் வசதி இல்லாத குழந்தைகள் ஏழைக் கூலித் தொழிலாளர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஸ்மார்ட்போன்கள் வாங்கி கொடுக்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.

இந்நிலையில்,  ஈரோட்டை அடுத்த நாதகவுண்டன்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் எளிய குடும்பத்தை சேர்ந்த 10  மாணவ, மாணவிகளுக்கு உதவும் நோக்கில் தனியார் அறக்கட்டளை சார்பில்  10 ஸ்மார்ட் போன்கள்  இலவசமாக இன்று வழங்கப்பட்டது.  மாவட்ட கல்வி அலுவலர் மாதேஷ் மாணவ மாணவிகளிடம் நேரடியாக வழங்கினார். 


Top