logo

சென்னை தாம்பரம் அருகே காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த போலீசார்:

28/Sep/2022 02:51:34

சென்னை தாம்பரம் அருகே காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர். பூந்தண்டலம் பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி சச்சினை பிடிக்க முயன்ற பொது காவலர் பாஸ்கரை கத்தியால் வெட்டிவிட்டு தப்ப முயன்றார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ரவுடி சச்சின் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை தாம்பரம் கண்டிககையை அடுத்த எருமையூரைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி சச்சின். இவர் சென்னை மீனம்பாக்கம் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற பட்டதாரி ஆவார். இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகள் தொடர்பாக போலீசார் ரவுடி சச்சினை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் அவர் தொடர்ந்து பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதால் அவரை பிடிப்பதற்காக போலீசார் இன்று அதிகாலை 3 மணிக்கு சென்றனர்.

எருமையூர் கிராமத்தில் கூட்டாளிகளுடன் ஒரி கல்லூரின் பின்புறம் காட்டுப்பகுதியில் மறைந்திருந்த போது போலீசார் அவர்களை பிடிக்கச் சென்றனர். அப்போது ரவுடி சச்சின் பாஸ்கர் என்ற காவலரை இடது தோள்பட்டையில் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். எனவே சேந்தமங்கலம் காவல் ஆய்வாளர் தற்காப்புக்காக ரவுடி சச்சினின் இடது முட்டியில் துப்பாக்கியில் சுட்டார். காயமடைந்த ரவுடி சச்சின் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதேபோல் ரவுடி தாக்கியதில் காயமடைந்த காவலர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறை உயர் அதிகாரிகள் காயமடைந்த காவலரை நேரில் சந்தித்து உடல் நிலை குறித்து விசாரித்து ஆறுதல் கூறினர்.

Top