logo
நீர்வரத்து அதிகரிப்பு: 101 அடியை தொட்டது பவானிசாகர் அணை

நீர்வரத்து அதிகரிப்பு: 101 அடியை தொட்டது பவானிசாகர் அணை

22/Aug/2021 10:27:54

ஈரோடு, ஆக:பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த நாட்களாக மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த 24 நாட்களுக்கு மேலாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 100 அடியில் இருந்து வருகிறது.இந்நிலையில்  நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால்  பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. 

இந்நிலையில்,  நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சுமார் 23 நாட்களாக 100 அடியில் இருந்து வந்த பவானிசாகர் அணை நேற்று 101 அடியை எட்டி உள்ளது.   நேற்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 101.01 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,241  கன வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.  பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடியும் என மொத்தம் 600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Top