logo
நாய், மாடு வளர்த்தால் இனிமேல் வரி விதிக்கப்படும்:  மதுரை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு

நாய், மாடு வளர்த்தால் இனிமேல் வரி விதிக்கப்படும்: மதுரை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு

11/Aug/2021 12:09:58

மதுரை, ஆக: மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் விலங்குகளை வளர்த்தால் 10 ரூபாய் வரி கட்ட வேண்டும் என்று மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அனுமதிக்கப்படாத இடங்களில் விற்பனைக்காக ஆடு, மாடு வதை செய்தால் ரூபாய் ஐந்தாயிரம் அபராதம் வசூலிக்கப்படும்.

ஆடு, மாடு, குதிரை கண்டுகொள்ளாமல் விடும் உரிமையாளர்களுக்கு ரூபாய் 1000 அபராதம் வசூலிக்கப்படும் மற்றும் சுகாதார சீர் கேடு விளைவிக்கும் வகையில் நாய்களை விட்டால் ரூபாய் 500 அபராதம், சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் திடக் கழிவுகளை பொதுவிடங்களில் போட்டும் இறைச்சி கடைகளுக்கு ரூபாய் 2000 அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அபராத விதிப்பு தொடர்பாக 15 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என்று மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இறைச்சிக் கடை, பிராணி விற்பனை நிலையத்திற்கு ஆண்டு உரிமம் சதுர அடிக்கு 10 ரூபாய் என்ற மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


Top