logo
புதுக்கோட்டையில் ஆனி திருமஞ்சனம்,   நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடை பெற்றது

புதுக்கோட்டையில் ஆனி திருமஞ்சனம், நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடை பெற்றது

15/Jul/2021 01:09:55

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை செல்லப்பா நகரில்  ஆனி திருமஞ்சனத்தை யொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் ஹோமம் நடைபெற்றது  இதில்  பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஆனி திருமஞ்சனத்தை யொட்டி சிறப்பு ஹோமம் நடைபெற்றது  இதில்   கணபதி பூஜை,  , கலச ஆவாஹனம், பாராயணம்,  லெட்சுமிபூஜை  . மற்றும்  சிறப்பு ஹோமம்  மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது.

தொடர்ந்து,   நடராஜருக்கும்,சிவகாமி அம்பாளுக்கும் பால், தயிர், மஞ்சள், சந்தனம், திரவியப்பொடி போன்ற அபிஷேகத்துடன் கலசாபிஷேகம்   தீபாஆராதனை நடைபெற்றது  பின்னர்  நடராஜர்மலர் அலங்காரத்தில் சிவகாமி அம்பாள் மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.நிகழ்வில்  புதுக்கோட்டைஜோதிடர் டாக்டர் கே.வி.செல்வராஜ், சுந்தரம் சிவனடியார், உள்ளிட்ட பக்தர்கள்  கலந்துகொண்டனர். 


இது குறித்து  புதுகை சுந்தரம் சிவனடியார்  கூறியதாவது: ஆனி திருமஞ்சனம் - நடராஜர் அபிஷேகத்தை தரிசித்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும். 

 அக்னி நட்சத்திரம் வைகாசியில் முடிந்த பின்னரும் ஆனி மாதத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். வெப்பத்தில் தகிக்கும் நடராஜர் திருமேனிக்கு, ஆனியில் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. சிவனாரின் அனைத்துத் தலங்களிலும் ஆனித் திருமஞ்சனம், முக்கியமான வைபவமாகக் கொண்டாடப்படுகிறது.

சிதம்பரத்தில் நடராஜருக்கு நடைபெறும் ஆனித் திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாகவும் தம்பதிகளுக்கு சுகமான வாழ்வும் கிடைப்பதாகவும், கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும்

அபிஷேகத்தை திருமஞ்சனம் என்றும் சொல்லலாம். நமக்கு ஒரு வருடம். அதுவே தேவர்களுக்கு ஒரு நாள். அதேபோல் தேவர்களுக்கு வைகறை மார்கழி, காலைப் பொழுது மாசி, உச்சிக்காலம் சித்திரை, மாலைப்பொழுது ஆனி, இரவுப் பொழுது ஆவணி, அர்த்த ஜாமம் புரட்டாசி என்று கணக்கிட்டுச் சொல்லப்பட்டிருக்கிறது. இதில், சந்தியா காலங்களான ஆனியும், மார்கழியுமே இறை வழிபாட்டிற்கு உகந்த மாதங்களாகப் கருதப்படுகின்றன.

நமக்கு ஓர் ஆண்டு, தேவர்களுக்கு ஒரு நாள். ஓர் ஆண்டில் நடராஜருக்கு ஆறு நாட்கள் அபிஷேகம் நடத்தப்படும். சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் கனகசபையில் மாலையில் அபிஷேகம் நடைபெறும். ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் இராஜ சபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் அபிஷேகம் நடைபெறும்.

ஆவணி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில் மாலையில் அபிஷேகமும், புராட்டாசி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில் மாலையில் அபிஷேகம் நடைபெறும்.

மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் இராஜ சபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் அபிஷேகம். மாசி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தியில் கனகசபையில் மாலையில் அபிஷேகம். இந்த அபிஷேகங்கள் நடைபெறும் போது நடராஜரை தரிசனம் செய்து குடும்பத்தோடு வழிபடுவது மிகவும் நல்லது என்றார் அவர்.

Top