logo
ஈரோட்டில் நள்ளிரவில் நூல் மில்லில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் நாசம்

ஈரோட்டில் நள்ளிரவில் நூல் மில்லில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் நாசம்

03/Jul/2021 05:50:41

ஈரோடு, ஜூலை: ஈரோட்டில் நள்ளிரவில் நூல் மில்லில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து  நாசமடைந்தன.

ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் சித்தோடு அருகே உள்ள ஆட்டை யாம்பாளையம் பகுதியல் நூல் மில் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த  மில்லில் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நியைில் வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு நூல் மில்லை பூட்டி சென்றுள்ளனர். இதனையடுத்து நள்ளிரவில் நூல் மில்லில் தீப்பிடித்து  எரிய தொட ங்கியது.

 இச்சம்பவம் குறித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு, பவானி, பெருந்துறை ஆகிய 3 இடங்களை சேர்ந்த தீயணைப்பு துறை யினர்  சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போ லீசாரின் முதற்கட்ட விசாரணையில் நூல் மில்லில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து நிகழ்ந்துள்ளதாகவும் சுமார் 30 லட்சம் மதிப்பிலான நூல்கள், இயந்திரங்கள் உள்ளிட் டவைகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர். நூல் மில்லில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Top