logo
வரும் மாதங்களில் டெல்டா வகை வைரஸின் தாக்கம் அதிகரிக்கும்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

வரும் மாதங்களில் டெல்டா வகை வைரஸின் தாக்கம் அதிகரிக்கும்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

01/Jul/2021 06:54:05

டெல்டா வகை கொரோனா வைரஸ்கள் தற்போது உலகளவில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. வரும் மாதங்களில் உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ்களின் தாக்கம்  அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாராந்திர தொற்றுநோயியல் துறை புள்ளி விவரங்களை பதிவேற்றியிருக்கும் உலக சுகாதார நிறுவன இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயசஸ்   இது பற்றி கூறியுள்ளதாவது : உலகில் 96 நாடுகளில் உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பரவல் காணப்படும் நாடுகளில் இந்த வகை கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது.


உருமாறிய வைரஸின் பரவல் அதிகரிக்கும் நிலையில், உலக சுகாதார நிறுவனம், உருமாறிய டெல்டாவானது மிக விரைவாக மேலும் அதிதீவிர வைரஸாக உருமாறி, வரும் மாதங்களில் ஆதிக்கம் செலுத்தும் என்று எச்சரித்துள்ளது.

இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்களிலேயே, டெல்பா வகை கொரோனா வைரஸ், மிக அதிகமாக பரவும் அபாயம் கொண்டிருக்கிறதுதடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்களிடையே இது மிக வேகமாகப் பரவி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்

Top