logo
அண்ணா வகித்த பதவிக்கு திமுகவில் கடும் போட்டி.

அண்ணா வகித்த பதவிக்கு திமுகவில் கடும் போட்டி.

12/Mar/2020 09:22:26

திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் எனும் தனிக்கட்சியை அண்ணத்துரை தொடங்கினார். பின்னர், திமுகவின் கொள்கை அளவில் பிடிப்பான பதவிகளில் அதிமுக்கியம் வாய்ந்த பொதுச்செயலாளர் பதவியை 1949-ம் ஆண்டு ஏற்றுக்கொண்டார். அவரது காலத்தில் கட்சிப் பணியும், ஆட்சிப் பணியும் வரலாற்று சுவடாக மாறியது. அந்தளவுக்கு உழைத்தவர் அண்ணா. பின்னர், அவரின் மறைவையடுத்து 1969-ம் ஆண்டு அப்போது மூத்த தலைவராக இருந்த நாவலர் இரா.நெடுஞ்செழியன் திமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்றார். அவருக்குப் பின்னர், அந்தப் பதவியை 1977-ல் .அன்பழகனுக்கு முன்மொழிந்தார் மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி . அன்று முதல் அவர் இறக்கும் வரை பொதுசெயலாளராக அன்பழகனே இருந்தார்.

  இவரது காலத்தில் திமுகவை நேர்த்தியாக வழிநடத்தினார். மேலும், இவரது காலத்தில் திமுக சந்தித்த சாதனையும், சோதனையும் என்னற்றவை. அவரது மறைவுக்கு பின்னர், பொதுச்செயலாளர் பதவியைப் பெற கட்சியின் மூத்த தலைவர்களான துரைமுருகன், .பெரியசாமி, டி.ஆர்.பாலு, ஆர்.ராசா, ..வேலு ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது. கருணாநிதி இல்லாத காலத்தில் கட்சியில் அண்ணா வகித்த உயர் பதவியை யாரிடம் கொடுப்பது என்பதில் ஸ்டாலினும் இடியாப்ப சிக்கலில் உள்ளார். உள்கட்சி தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவும், கூட்டணி கட்சிகளை சரிவர கையாளவும் தகுதியான ஒருவரை தேர்வு செய்ய மு..ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Top