15/Jun/2021 06:37:01
புதுக்கோட்டை, ஜூன்: வர்மம் என்ற சொல் மர்மம் என்ற வார்த்தையிலிருந்து வந்தது.. மர்மம் என்பது மறை பொருள் அல்லது ரகசியம் என சித்த மருத்துவம் கூறுகின்றது.
புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் எஸ்.உம்மல் கதிஜா மற்றும் கோவிட் 19 சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தின் நோடல் அதிகாரி மருத்துவர் ஆ.மாமுண்டி ஆகியோர் மேலும் கூறியதாவது:
மர்மம் என்பது மறை பொருளாக இருந்து செயல்பட்டு ரகசியமாக நோயை நீக்கும் மர்ம புள்ளிகள் தான் வர்ம புள்ளிகள். அதாவது உயிரினங்களின் உடலில் தசைகள் ரத்த குழாய்கள் நரம்புகள் என்புகள் டென்டான் ஆகியன எந்தந்த இடங்களில் ஒன்றோடு ஒன்று பின்னிக் கிடக்கின்றனவோ அவ்விடங்களில் பிராணன் அடங்கி இருக்கும்.
அப்பிராண சக்தியை தேவையான மாத்திரை அளவில் இயக்கும் பொழுது பிராண சக்தி உடல் முழுவதும் பரவி உடல் உள்ளுறுப்புகள் வெளி உறுப்புகள் ஆகியவற்றை சிறந்த முறையில் செயல்பட வைத்து உடல் நல்ல நிலையில் வைக்க உதவுகிறது.
வர்மம் நம் உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மொத்தம் 108. படு வர்மம் 12 தொடுவர்மம் 96 படுவர்மம் புள்ளிகள் அனைத்தும் மிகமிக கவனமுடன் கையாள வேண்டிய புள்ளிகள் வர்மம் பட்டால் அசாத்தியம் தொடு வர்மம் 96 -ம் சாத்தியமான ஒன்றாகும்.
புதுக்கோட்டையிலுள்ள கோவிட் 19 சித்த சிறப்பு சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு சுயமாக இயக்கக்கூடிய சுய வர்ம புள்ளிகள் திலர்த வர்மம்,தும்மி காலம், நேர் வர்மம் விலங்கு வர்மம்,அடப்ப காலம் ஆகியவற்றை பணிநேரம் மருத்துவர்களின் ஆலோசனையின் பெயரில் அவர்களின் செயல்முறை விளக்கத்துடன் அவர்களின் மேற் பார்வையில் செய்ய அறிவுறுத்துகின்றோம்.
இவை அனைத்தும் பிராண சக்தியை தூண்டி ரத்த ஓட்டத்தை அதிகரித்து ஆக்ஸிஜன் அளவை சீராக வைக்கவும் நுரையீரலை தொற்று அதிகம் பாதிக்காத அளவுக்கு காற்று முன்னுறைகள் நன்கு செயல்பட செய்கிறது. மேலும் லுயூக்கோ பயாஸிஸ் தூண்டி அதன் மூலம் நோய் எதிர்ப்பு செல்களை உண்டாக்கி இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டி நோய் தொற்றிலிருந்து விரைவில் குணமடைய உதவுகிறது.
மேலும் நோயாளர்களுக்கு உண்டாகும் மையால்ஜியா என்ற உடல் வலியை உடலிலேயே சுரக்கக்கூடிய இயற்கை வலி நிவாரணியாக உள்ள எண்டார்பின்சை சுரக்க செய்து அவர் களுக்கு உள்ள உடல் வலியை போக்க உதவுகிறது .
மேலும் அவர்களுக்கு தொற்றின் காரணமாக உண்டாகும் மன அழுத்தம் பயம் மனக்குழப்பம் உறக்கமின்மை போன்றவை களை நீக்கி ஒருவித மன மகிழ்ச்சியை உண்டாக்கி உறக்கத் தை உண்டாக்கும் விதமாகவும் பயன்படுகிறது