logo
ஓட்டுனர் உரிமம் பெறும் விதிகள்:  அதிரடி மாற்றத்தை செய்த மத்திய அரசு

ஓட்டுனர் உரிமம் பெறும் விதிகள்: அதிரடி மாற்றத்தை செய்த மத்திய அரசு

14/Jun/2021 10:08:24

அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஓட்டுனர் பயிற்சி பெறுவோர், ஆர்.டி.. அலுவலகங்களில் வாகனங்களை இயக்காமல், ஓட்டுனர்(லைசென்ஸ்) உரிமம்  பெறுவதற்கான புதிய விதிகளை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மோட்டார் வாகன திருத்தச் சட்டம் 2019-இன் 8-ஆம் பிரிவின்படி ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளின் அங்கீகார விதிகளை மாற்ற முடியும். அதன்படியே இந்த புதிய விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதிய விதிகள்: அங்கீகாரம் பெற்ற ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகள், 2 ஏக்கர் பரப்பளவில் பயிற்சி எடுப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். அவர்களிடம் பயிற்சி வாகன வடிவமைப்புடன் கூடிய வசதி இருக்க வேண்டும்.பயிற்சியளிப்பவர், மத்திய அரசின் அங்கீகாரம் பெற்றவராக இருக்க வேண்டும்.

போக்குவரத்து சின்னங்கள், போக்குவரத்து விதிகள், வாகன கட்டமைப்பு, பொதுத் தொடர்பு, முதலுதவி உள்ளிட்டவை குறித்த வகுப்புகளை நடத்த வேண்டும். வாகனம் ஓட்டுவதற்கு மலை, கிராமம், நகரம், மேடு, பள்ளம் போன்ற அமைப்புகளில் கற்பிக்க வேண்டும்.

விடியோ பதிவு: இதுபோன்ற பயிற்சிக்கு பின், சென்சார் ஓடு பாதையில் வாகனம் ஓட்டும் சோதனையில் வெற்றி பெறுவதுடன், அதனை, விடியோ பதிவு செய்ய வேண்டும். இந்த சான்றுகளுடன் ஆர்.டி.. அலுவலகம் சென்று, வாகனம் ஓட்டிக் காட்டாமலேயே அவர்கள் லைசென்ஸ் பெறலாம்.

இத்தகைய மையங்களில் பயிற்சியாளார்களுக்கு உயர்தர பயிற்சி அளிக்கும் வகையில் பிரத்யேக ஓடுதளங்கள் இருக்கும். இதனால், சிறப்பான பயிற்சி உறுதி செய்யப்படும். இந்த மையங்கள் மூலம் மோட்டார் வானச் சட்டம் 1988-இன் படி, ஒரு வாடிக்கையாளர் தனது வாகனம் ஓட்டும் திறனை புதுப்பித்துக் கொள்ளும் வகையிலும் பயிற்சிகளை வடிமைக்கலாம்.

இத்தகைய அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையங்களில் பயிற்சி பெறுபவர்கள் ஆர்டிஓ அலுவலகத்தில் லைசன்ஸ் வழங்கப்படும் போது நடத்தப்படும் தேர்வுகளில் பங்கேற்கத் தேவையில்லை. இதனால், பயிற்சி முடிந்தவுடனேயே வாகன ஓட்டிகளுக்கு லைசன்ஸ் கிடைத்துவிடும்.

அதேபோல் இந்த மையங்களில் தொழிற்சாலைகளுக்கான வாகனங்களை இயக்கும் வகையிலும் பிரத்யேக பயிற்சி அளிக்கப்படும். இதனால், பிரத்யேக, சிறப்பு வாகனங்களை இயக்குவோரின் பற்றாக்குறை தீரும். இதனால், சாலை விபத்துகள் தவிர்க்கப்படும்.

ரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி பள்ளிகளில் ஓட்டுனர் பயிற்சி பெற்றவர்கள்,   வட்டார போக்குவரத்து (ஆர்.டி.ஓ)அலுவலகத்தில் வாகனத்தை முறையாக ஓட்டினால் மட்டுமே தற்போது லைசென்ஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறைகளில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் மாற்றங்களை செய்துள்ளது.

இந்த புதிய நடைமுறை ஜூலை 1-ஆம் தேதி முதல்  (அடுத்த ஜூலை)மாதம் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என அதில் கூறப்பட்டுள்ளது  புதிய விதிமுறையால், சிறப்புப் பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் கிடைப்பார்கள் இதனால் சாலை விபத்துகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

                                                  

        

Top