logo
கொரோனா நிவாரணம்: இரண்டாம் தவணை உதவித்தொகை வழங்கும் பணி: ஜூன் 5 -இல் தொடக்கம்- ஆட்சியர் தகவல்

கொரோனா நிவாரணம்: இரண்டாம் தவணை உதவித்தொகை வழங்கும் பணி: ஜூன் 5 -இல் தொடக்கம்- ஆட்சியர் தகவல்

03/Jun/2021 09:18:00

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண உதவித் தொகை இரண்டாம் தவணைத்தொகை  வழங்கும் பணி வரும் சனிக்கிழமை தொடங்கப்பட உள்ளது.

மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்: கொரோனா நோய் தொற்றுப் பரவலை தடுப்பதற்காக மத்திய அரசு வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் கடந்த 24.5.2021  முதல் தளர்வுகள் அற்ற முழு  ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முழு ஊரடங்கு 7.6.2021 காலை 6 மணி வரை அமலில் இருக்கும்.

இருப்பினும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தொடர்ந்து இன்றியமையா பொருட்கள் மற்றும் கொரானா நிவாரணத் தொகை குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யும் வகையில் திறக்க  அரசு அனுமதித்துள்ளபடி நியாயவிலைக் கடைகள் தினந்தோறும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை    இயங்கி வருகின்றன.

கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் ஏற்கெனவே முந்தைய மாதங்களில் கடைபிடித்தது  போலவே ஜுன் 2021 மாத பொது விநியோகத் திட்ட செயல்பாட்டினை பாதுகாப்புடன் சுழற்சி முறையில் மேற்கொள்ள நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும்.

1.6.2021 முதல் 4.6.2021 முடிய நான்கு தினங்களுக்கு நியாயவிலைக் கடை பணியாளர்கள் குடும்ப அட்டைதாரர்கள் இல்லங்களுக்கு நேரில் சென்று அவர்தம் பொருட்கள் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டுள்ள டோக்கன்களை விநியோகம் செய்வார்கள்.

டோக்கன்கள் அடிப்படையில் ஜுன் 2021 மாதத்திற்கான விநியோகம்  வரும்  (5.6.2021) சனிக்கிழமை முதல் நியாயவிலைக் கடைகளில் மேற்கொள்ளப்பபடும். நிர்வாக காரணங்களினால் துவரம் பருப்பு மட்டும் 7.6.2021 முதல் நியாயவிலைக் கடைகளில் விநியோகம் செய்யப்படும்.

கொரோனா நோய்; தொற்றிலிருந்து குடும்ப அட்டைதாரர்கள் தங்களை தற்காத்து கொள்ளும் பொருட்டு முக கவசம் அணிந்தும்  2 மீட்டர்; சமூக இடைவெளியை கடைபிடித்தும் கொரோனா நிவாரண உதவித்தொகை 2-ஆம் தவணைத் தொகை ரூ.2,000 தொடர்புடைய நியாய விலைக் கடைகளில்  5.6.2021 முதல் பெற்றுக் கொள்ளலாம்.

Top