logo
கொரோனா தடுப்பு நடவடிக்கை: தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஈரோடு மாட்டுச் சந்தை  மூடப்பட்டது

கொரோனா தடுப்பு நடவடிக்கை: தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஈரோடு மாட்டுச் சந்தை மூடப்பட்டது

29/Apr/2021 05:24:22

ஈரோடு, ஏப்: கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் எதிரொலியாக தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஈரோடு கருங்கல்பாளையம் கறவை  மாட்டுச் சந்தை இந்த வாரம்(வியாழக்கிழமை) மூடப்பட்டது.

ஈரோடு கருங்கல்பாளையம் கறவை மாட்டுச்சந்தை  வாரம் தோறும்  வியாழக்கிழமை நடைபெறுவது வழக்கம். இந்தச் சந்தைக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்  கேரளா, மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், கோவா, தெலங்கானா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கிச் செல்வது வழக்கம். தினமும் நடைபெறும் சந்தையில் ரூ. 3 கோடி முதல் 5 கோடி வரை வர்த்தகம் நடைபெறும்.

 இந்நிலையில் கடந்த மாதம்  தேர்தல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட் டதால் வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் மாட்டு சந்தையில் வியாபாரம் கடுமையாக பாதித்தது. இந்நிலையில் தற்போது கொரோனா இரண்டாம் அலை  வேகமாக பரவி வருவதால் வெளிமாநில வியாபாரிகள் இங்கு வர பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அதன்படி - பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதனால் வெளிமாநில வியாபாரிகள் கடந்த மூன்று வாரமாக வரவில்லை. மேலும் தற்போது கேரளா மகாராஷ் டிராவில் தொற்று அதிக அளவில் பரவி வருவதால் மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் வரவில்லை. இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

 இந்நிலையில், வியாழக்கிழமை  நடைபெற இருந்த மாட்டுச்சந்தை திடீரென ரத்து செய்யப் பட்டுள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்த வாரம் மாட்டுச்சந்தை நடைபெறவில்லை.இது குறித்து ஏற்கெனவே வியாபாரிகளுக்கு மாட்டு சந்தை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து இன்று மாட்டு  சந்தை நிர்வாகம் சார்பில் ஊழியர்கள் கிருமி நாசினி, ப்ளீச்சிங் பவுடரை தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அடுத்த வாரம் வியாழக்கிழமை வழக்கம்போல் மாட்டு சந்தை  செயல்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Top