logo
ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின

ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின

25/Apr/2021 03:55:09

ஈரோடு, ஏப்: முழு ஊரடங்கால்  ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடிக்கிடந்தன.


தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக் கப்பட்டது. பின்னர் இயல்பு நிலை திரும்பியதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில் இந்த வருடம் மார்ச் மாதம் கடைசி வாரத்தில் இருந்து தமிழகத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் வேகம் எடுக்கத் தொடங்கியது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. தினமும் தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.கிட்டத்தட்ட தினசரி பாதிப்பு 14 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மே மாதம் இரண்டாவது வாரம் வரை கொரோனா தாக்கம் உச்சத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.

 இதையடுத்து தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4  மணி வரை இரவு நேர ஊரடங்கையும், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளில் முழு நேர ஊரடங்கை யும் பிறப்பித்து உத்தரவிட்டது. அதன்படி இரவு நேர ஊரடங்கு அமலில் வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கை யொட்டி பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட் டுள்ளது. இதனால் ஈரோடு பஸ் நிலையம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப் பட்டது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. ஈரோடு மாநகரில் எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும் பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, காளைமாடு சிலை, கருங்கல் பாளையம், ஸ்வஸ்திக் கார்னர், மேட்டூர் ரோடு, கே வி என் ரோடு, ஈஸ்வரன் கோயில் வீதி போன்ற பகுதி அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

ஈரோடு மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இன்று அடைக்கப்பட்டு இருந்தன. ஜவுளி நிறுவனங்கள் வணிக வளாகங்கள் ஈரோடு  வஉ சி பூங்கா பகுதியில் செயல்பட்டு வந்த நேதாஜி பெரிய மார்க்கெட், உழவர் சந்தை, இறைச்சிக் கடைகள் ,மீன் கடைகள்,

ஆகியவை அடைக்கப்பட்டிருந்தன. ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், குமலன்குட்டை பள்ளி மற்றும் பெருந்துறை கோபி சத்தியமங்கலம் போன்ற பகுதியில் செயல்படும் உழவர் சந்தை இன்று மூடப்பட்டிருந்தன. இதேபோல்ஈரோடு மாவட்டத்தில் உள்ள 214 டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் அதே நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. பால் கடைகள், மருந்து கடைகள், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்குகள் வழக்கம் போல் செயல்பட்டன.

Top