logo
தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வு- வீடுகளிலேயே மாணவர்களை தயார்படுத்தும் பணி தொடக்கம்

தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வு- வீடுகளிலேயே மாணவர்களை தயார்படுத்தும் பணி தொடக்கம்

27/Sep/2020 08:19:48

இது குறித்து செரியலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் அன்பரசன் வெளியிட்ட தகவல்:

   புதுக்கோட்டை மாவட்டம், செரியலூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் இந்த கல்வி ஆண்டில்( 2020-2021 )நடைபெற இருக்கும் தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத இருப்பவர்கள் இணைந்தகட்செவி  (Whats app Group)அஞ்சல் குழு  அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுத இருப்பவர்கள் விடுபட்டு இருந்தால் உடனடியாக இந்தக்குழுவில்  இணைந்து கொள்ளலாம்.தொடக்கநாளான ஞாயிற்றுக்கிழமை  மாணவர்களின் இல்லங்களில் நான்கு இடங்களில் முதல் பயிற்சி வகுப்புநடத்தப்பட்டது. தேர்வுக்கு தேவையான குறிப்புகள், வழிகாட்டுதல்கள், முந்தைய தேர்வு வினா விடைகள்மாடல் தேர்வு பயிற்சி வினாக்கள், க்யூ ஆர் கோடு பயிற்சி வினாக்கள், பாடத்தின் முக்கிய குறிப்புகள்,பாடத்தினை படிக்க உரிய வழிகாட்டுதல், பாடத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வினாக்கள் உருவாகக்கூடிய விதம் போன்ற பயிற்சிகள் தரப்பட்டு சில குறிப்பு நகல்களும் தரப்பட்டன. மேலும் மனத்திறன் வினாக்களுக்கு உரிய வினா விடை குறிப்பிடும் மற்றும் youtube Video பார்க்கக்கூடிய வழிமுறைகளும் நான் அனுப்பக்கூடிய Pdf file - பார்க்கக்கூடிய வழிமுறையும் இன்றைய முதல்கட்ட பயிற்சி வகுப்பில் கற்றுத் தரப்பட்டன. இந்தக்குழுவில்  தினசரி பாடம் சார்ந்த குறிப்புகளும் வீடியோக்களும் pdf file -ஆக அனுப்பப்படும் Audio குறிப்பும் தரப்படும்தேவையான பாடத்தில் புரியாத பகுதிகளுக்கு உரிய விளக்கம், அந்தந்த பாட ஆசிரியர்கள் மற்றும் சிறந்த கல்வியாளர்களின் உரிய வழிகாட்டுதலும் சேர்த்து

 தரப்படும். புரியாத பகுதிகளை இந்த குறிப்பிலேயே கேட்டு மாணவர்கள் தெளிவு பெறலாம். அல்லது நேரிலே அடுத்த பயிற்சி வகுப்பிற்கு வீட்டுக்கு வருகின்ற பொழுது  கேட்டுத் தெளிவு பெறலாம்.வலைதளங்கள் மூலம் நடைபெறும் Nmms  Online test -இல் பங்கேற்று பயிற்சி பயிற்சி பெற உரிய வழிகாட்டுதல் தரப்படும்.

அரசின் TNTP -இன் மூலம் நடைபெறும் ஆன் லைன் ONLINE. Test -இல் பங்கேற்று பயிற்சி பெற உரிய வழிகாட்டுதலும் தரப்படும். அடுத்த பயிற்சி வகுப்பு எப்போது என்பது  முதல் நாளே தெரியப்படுத்தப்படும்இணையதள வசதி இல்லாதவர்கள் அலைபேசி அழைப்பு மூலம் தெரியப்படுத்தப்படும். அடுத்த பயிற்சி வகுப்பு 29.09.2020 அன்று தங்கள் இல்லத்தில் நடைபெறும் வடக்குப் பகுதியில் காலை 10:00 .கிழக்குப்பகுதி 11 மணி.தெற்குப் பகுதி 12 மணி.மையப்பகுதி மதியம் 1 மணி அளவில் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

.

Top