logo
உலக சிறுநீரக தினத்தையொட்டி  ஈரோட்டில்  விழிப்புணர்வு  பேரணி, கருத்தரங்கம்

உலக சிறுநீரக தினத்தையொட்டி ஈரோட்டில் விழிப்புணர்வு பேரணி, கருத்தரங்கம்

11/Mar/2021 05:23:57

ஈரோடு, மார்ச் :  உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு  ஈரோடு அபிராமி கிட்னி கேர், டாக்டர் தங்கவேலு மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ சங்கம், செஞ்சிலுவை சங்கம் சார்பில் விழிப்புணர்வு  பேரணி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.

உலக சிறுநீரக தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் வரும் இரண்டாவது வியாழக் கிழமை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு அபிராமி கிட்னி கேர், டாக்டர் தங்கவேலு மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ சங்கம், செஞ்சிலுவை சங்கம் சார்பில் உலக சிறுநீரக தின கருத்தரங்கம் நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு அபிராமி கிட்னி கேர் சென்டர் தலைவர்  டாக்டர் தங்கவேலு தலைமை வகித்தார். இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணை தலைவர் டாக்டர் சி.என்.ராஜா, ஈரோடு கிளை தலைவர் டாக்டர் பிரசாத், சுதா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.  சிறுநீரக செயலிழப்பு குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் சரவணன் பேசினார். முடிவில் டாக்டர் பூர்ணிமா சரவணன் நன்றி கூறினார். 

முன்னதாக, உலச சிறுநீரக தின விழிப்புணர்வு வாகன பேரணி கரூர் அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் துவங்கி ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் நிறைவடைந்தது. இதில், சிறுநீரகத்தை பாதுகாப்போம், சிறுநீரக வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிறுநீரக செயலிழப்பை தடுப்போம் என்ற பதாகைகளை ஏந்தியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதுகுறித்து அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் இயக்குநர் டாக்டர் சரவணன் கூறியதாவது: சிறுநீரக பாதிப்பு நோய்கள் தற்போது அதிகரித்து வருகிறது. 100பேரில் 40 பேர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளவர் களுக்கு சிறுநீரக பாதிப்பு அதிகளவில் ஏற்படும். அவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை சிறுநீரக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். சிறுநீரக பாதிப்புகளை முதல் கட்டத் திலேயே அதாவது சிறுநீரக செயல்பாடு குறித்து உரிய பரிசோதனைகள் மேற்கொண்டு, அதற்குரிய சிகிச்சை முறைகளை கடைபிடித்தால் சிறுநீரக செயலிழப் புகளை தவிர்க்க முடியும். 

ஈரோடு அபிராமி கிட்னி கேர் மற்றும் கரூரில் உள்ள எங்களது மருத்துவமனையிலும் தினசரி 2,500பேருக்கு மேல் சிறுநீரக பாதிப்புள்ளவர்களுக்கு டயாலிசிஸ் செய்யப்படுகிறது. இதில், தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக டயாலிசிஸ் செய்யப்படுகிறது. 

இதேபோல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ரத்த சொந்தம் மற்றும் உறவினர்களிடம் இருந்து தானமாக பெற்றும், தமிழ்நாடு உடல் உறுப்பு தானம் பெறும் அமைப்பு மூலம் மூளைச்சாவு அடைந்தவர்களின் சிறுநீரகத்தை அரசு மூலம் பெற்று அறுவை சிகிச்சை மூலம் பொறுத்தப்படுகிறது. இந்த மாற்று அறுவை சிகிச்சையும் அரசின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் செய்யப்படுகிறது என்றார் அவர்.

Top