29/Jan/2021 10:01:19
ஈரோடு, ஜன:ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட கருங்கல்பாளையம் மாநகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 35 லட்சம் மதிப்பில் கூடுதலாக மூன்று அறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கூடுதல் வகுப்பறைக்கான திறப்பு வெள்ளிக்கிழமை நடந்தது.
நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் தலைமை வகித்து கூடுதல் வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இதைத் தொடர்ந்து அதே பள்ளியில் படிக்கும் 166 மாணவிகளுக்கு ரூ.6 லட்சம் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை எம்.எல்.ஏ.க்கள்.கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் வழங்கினார். காமராஜர் பள்ளியில் படிக்கும் 142 மாணவர்களுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.
இதைத்தொடர்ந்து வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் நூற்றுக்கணக்கான மாணவிகளுக்கும் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், துனைமேயர் பழனிசாமி, பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஷ், தங்கமுத்து, முருக சேகர், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் வீரக்குமார், மாணவரணி மாவட்ட செயலாளர் ரத்தன் பிரித்வி, இணைச் செயலாளர் யுனிவர்சல் நந்தகோபால், உள்பட பலர் கலந்து கொண்டனர்.