01/Jan/2021 08:29:29
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் வெளியேறிட மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தலைமைச் செயலாளர் க.சண்முகம் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
செம்பரம்பாக்கம் ஏரியில் மிகை நீர் வெளியேறும் வாய்க்காலில் செக்டேம் அமைத்து மூடு கால்வாய் வழியாக தண்ணீரை திருப்பி மணப்பாக்கம் மற்றும் தந்தி கால்வாய்காலில் தண்ணீரைக் கொண்டு சென்று சிக்கராயபுரம் கல் குவாரியில் தண்ணீரை நிரப்புவது குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் செம்பரம்பாக்கம் ஏரியில் மிகை நீர் தண்ணீர் அடையாறு ஆற்றில் திருநீர்மலை பாலத்தில் கலக்கும் இடத்தில் அடையாற்று வெள்ள நீரை மிக எளிதாக வெளியேற்ற அடையாறு ஆற்றை அகலப்படுத்துவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின்போது பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் க.மணிவாசன், தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் நதிநீர் இணைப்பு கழகத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் கே.சத்யகோபால் (ஓய்வு), சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரிய மேலாண்இயக்குநர் டி.என்.ஹரிஹரன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயிஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.