logo
இஸ்ரேலில் தடுப்பூசி போடும் பணி தொடக்கம் முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்ட பிரதமர்

இஸ்ரேலில் தடுப்பூசி போடும் பணி தொடக்கம் முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்ட பிரதமர்

21/Dec/2020 07:10:44

இஸ்ரேல், டிச: இஸ்ரேலிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

கொரோனாவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர கொரோனா தடுப்பூசி ஒன்றே முழுமையான தீர்வு என்பதால், இந்தியாவிலும் இந்த தடுப்பூசியை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் எனஅனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

உலக நாடுகளை நேற்றும் கொரோனா தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளன. இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இஸ்ரேல் நாடு பைசர் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்தது. இதனை தொடர்ந்து அங்கு தடுப்பூசி போடும் பணி நேற்று முதல் தொடங்கியது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்து நாட்டின் முதல் தடுப்பூசியை தனக்கு போட்டுக்கொண்டார்.அவரைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர்

தடுப்பூசி செலுத்தி கொண்டார். அந்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 40 லட்சம் டோஸ்கள் தடுப்பூசி மருந்து மக்களுக்கு செலுத்தப்பட உள்ளது.

தடுப்பூசி போட்டுக் கொண்டபிரதமர் நேதன் யாகுன் நிருபர்களிடம் கூறியதாவது:இந்த தினம் இஸ்ரேலுக்கு மிகச் சிறந்த நாள். தனிப்பட்ட முன்மாதிரியாக இருக்கவும், தடுப்பூசி போடமக்களை ஊக்குவிக்கவும், தடுப்பூசி போட்டுக் கொண்டேன். இந்த மாத இறுதிக்குள் பல லட்சம் டோஸ்கள் மருந்து வர உள்ளதால், மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.உலகின் பல நாடுகள்தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ள நிலையில் இந்தியாவும் தடுப்பூசிக்கு அனுமதிஅளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

                                                   


Top