logo
வேலூர் அருகே உழவர்களுடன் ஒரு  நாள்  திருவிழா

வேலூர் அருகே உழவர்களுடன் ஒரு நாள் திருவிழா

18/Dec/2020 07:51:04

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் தாலுக்கா கீழ்முட்டுக்கூர் கிராமத்தில்  உழவர்களுடன் ஒரு நாள் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

 நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளுக்கு  பாதபூஜை செய்து மாலை கதர் துண்டு  அணிவித்து  மற்றும் நினைவு பரிசு வழங்கி   அவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் வளர்ந்துவரும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும் வெகு விமரிசையாக நடைப்பெற்றது.

இவ்விழாவில்,  நகர்புறத்தில்(வேலூர், ஆற்காடு,  ராணிபேட்டை) இருந்து வருகை தந்திருந்த 100 மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் அனைவரும் மாட்டு வண்டியில்  பயணம் செய்து விவசாய நிலங்கள் மற்றும் இயற்கை உணவின் அவசியம் மற்றும் இயற்கை விவசாயத்தை  பற்றி அறிந்து கொண்டனர். வருகை தந்திருந்த அனைவரும்  இயற்கையை ஆவலுடனும் அதிசயமாகவும்  ரசித்தனர். 200 -க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் விழாவில் கலந்துக் கொண்டனர்.

சிறப்பு நிகழ்ச்சிகளாக, நாற்று நடுதல், நெற்க்கதிர் அருவடை செய்தல், புலியாட்டம், கோளாட்டம், பரதநாட்டியம், மண்பாண்டம் செய்தல், வண்ணம் தீட்டுதல், உரியடித்தல், நாட்டுப்புற பாடல், கொக்காலி கட்டை ஆட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைகள்  சிறப்பாக நடைப்பெற்றது. கிராமத்து சார்பாக விருந்தாக உணவு  மற்றும் பழங்கள் அளிக்கப்பட்டது.

இறுதியாக நிகழ்ச்சி ஏற்பட்டார்களுக்கு கிராம மக்கள் சார்பாக கேசவன், ஓவியர்  கலைஆனந்த் மற்றும் தன்னார்வளர்களுக்கு  சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்து.விவசாயத்தையும் விவசாயிகளையும் போற்றுவோம் இனி வரும் சந்ததியினருக்கு விவசாயத்தை பற்றி கற்று கொடுப்போம்.உழவுக்கும் , உணவுக்கும் வந்தனை செய்வோம் என்பதை உயிர்ப்புடன்  உணர்த்தும் வகையில் இந்த  விழா நடைபெற்றது. 


Top