logo
 விவசாயிகளின் விரோதசட்டங்களைதிரும்பப்பெறவலியுறுத்தி அனைத்துதொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

விவசாயிகளின் விரோதசட்டங்களைதிரும்பப்பெறவலியுறுத்தி அனைத்துதொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

20/Nov/2020 05:26:20

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பேருந்துநிலையத்தில் அனைத்துதொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் மத்தியில் ஆளும் பிஜேபிஅரசின் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் விரோதசட்டங்களைதிரும்பப்பெறவலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டதொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.

மத்தியில் ஆளும் பிஜேபிஅரசுமக்களின் விரோத விவசாயவிரோத தொழிலாளர்விரோதஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறது எனவும் குறைந்தபட்ச பாதுகாப்புள்ள தொழிலாளர்சட்டங்களையும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாகமாற்றி  அமைத்துகார்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக நிறைவேற்றி அமலாக்கி வருகிறது என்றும் மக்கள் வரி பணத்தில் நாட்டு மக்கள் நலனுக்காக உருவான பொதுத்துறை நிறுவனங்களை  தனியார்மயப்படுத்தும் நிலையில் எதிர்கால சந்ததியினர் யாரும்அரசு வேலையில் சேருவதுஎன்பது வெறும் கனவாகபோகும்  சூழல்  உருவாகியுள்ளது. மத்திய பிஜேபிஅரசின் தொழிலாளர்கள் விரோத விவசாயிகள்  விரோதமக்கள் விரோத சட்டங்களை திரும்பபெறவலியுறுத்தி அனைத்து மத்தியமாநில தொழிற்சங்க கூட்டமைப்புசார்பில் 26.11.2020 அன்று அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்.

 அதன் ஒருபகுதியாக ஈரோடுமாவட்டம், கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில்  நடந்த . ஆர்ப்பாட்டத்திற்கு டிஎன்எஸ்டிசி. துரைராஜ்  தலைமை வகித்தார். டிடபல்யுஎஸ்சிடிசி. எம்.கே.நடராஜ் குடிநீர் வடிகால் வாரியத்தின் கிரிபிரகாஷ்,  டாஸ்மாக்  சரவணன்,எல்பீஎப் பாலகுமாரன் போக்குவரத்துதொழிலாளர் சங்க சரவணன், சிபிஎம் கெம்பராஜ் விவசாயதொழிலாளர்கள் சங்கத்தின் மாணிக்கம் ஆகியோர் உட்படபலர் கலந்துகொண்டனர். 


Top