logo
ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு மறுப்பு:உச்சநீதிமன்ற உத்தரவு ஏமாற்றமளிக்கிறது- சரத்குமார் கருத்து

ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு மறுப்பு:உச்சநீதிமன்ற உத்தரவு ஏமாற்றமளிக்கிறது- சரத்குமார் கருத்து

27/Oct/2020 09:49:41

சென்னை: சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் ரா.சரக்குமார்  வெளியிட்ட அறிக்கை: ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 50% சதவிகித இட ஒதுக்கிடு வழங்க வேண்டும் என்று  உச்ச நீதிமன்றதில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இடஒதுக்கீட்டை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு ஏமாற்றமளிக்கிறது.

இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவ கல்லூரிகள் கொண்ட தமிழகத்தில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட 27% இட ஒதுக்கீட்டில் 2017 முதல் 11,027 இடங்கள் மறுக்கப்பட்டுள்ளது. 50% சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படாவிட்டாலும், மறுக்கப்பட்ட 27% மருத்துவ இடங்களையாவது நியாயமான முறையில் நடப்பு ஆண்டு

முதல் பிரித்து வழங்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 

தமிழக ஆளுநர் மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% வழங்கப்பட்ட உள் ஒதுக்கட்டு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்வது ஒருபுறம், மத்திய அரசு உச்சத்தி மன்றத்தில் 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்க முடியாது என மறுப்பு தெரிவிப்பது மறுபுறம் என தொடர்ந்து தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள்.

தமிழக மாணவர்களின் மறுக்கப்பட்ட நீதிக்காக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து உரிய நிதியை பெற்றுத்தரும்படி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


Top