logo
பள்ளிகள் திறக்கும்போது குழந்தைகள் நலன் குறித்து  ஆணையம் முடிவு செய்யும்: ஆணைய உறுப்பினர் ஆனந்த்

பள்ளிகள் திறக்கும்போது குழந்தைகள் நலன் குறித்து ஆணையம் முடிவு செய்யும்: ஆணைய உறுப்பினர் ஆனந்த்

25/Oct/2020 05:27:42

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் செய்தியாளர்களுக்கு இன்று(அக்.25) அளித்த பேட்டி: 

10 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை என்பது பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு அமலில் உள்ளது.  குற்றங்களை பொறுத்து மரணதண்டனை என்பது தற்போதைய சூழ்நிலையில் உள்ளது. 

கொரோனா காலகட்டத்தில் கொரோனா பாதித்த குழந்தைகளின் மனதை பக்குவப்படுத்த சம்வே தனா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு குழந்தைகளுக்கு ஆலோசனை மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.  கொரோனா தடுப்பு முயற்சியில் தமிழக அரசின்  செயல்பாடு சீராகவும் சிறப்பாகவும் உள்ளது. பள்ளிகள் திறப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை வழங்கி வருகிறது.

 மாநில அரசுகள் முடிவு செய்து பள்ளிகளை திறக்கும்போது குழந்தைகள் நலன் குறித்து குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் முடிவெடுக்கும்.  பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சிறப்பாக செயல்பட்டார். அதேபோல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரண நிதியை  தமிழக அரசு உடனடியாக வழங்கியது 


Top