logo
ஆயுத பூஜை விழா:  புதுக்கோட்டை மலர் அங்காடியில் குவிந்த வியாபாரிகள், பொதுமக்கள்

ஆயுத பூஜை விழா: புதுக்கோட்டை மலர் அங்காடியில் குவிந்த வியாபாரிகள், பொதுமக்கள்

23/Oct/2020 11:30:29

புதுக்கோட்டையில் ஆயுத பூஜையை முன்னிட்டு மலர் உற்பத்தியாளர்கள் தங்களது மலர்களை விற்பனை செய்வதற்காக வெள்ளிக்கிழமை(அக்.23) குவிந்தனர்.

தமிழகத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விமரிசையாக கொண்டாடப்படும்.  அந்த நாளில் வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். அந்த பூஜைகளில் முதன்மையான பொருளாக  மலர் வைத்து பூஜிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஆயுத பூஜை வருகிற 25-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மலர் வணிக வளாகத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மலர் சாகுபடி விவசாயிகள்  பலவிதமான மலர்களை ஏலத்தில் விற்பனை செய்வதற்காக குவிந்தனர்.

  இதுகுறித்து  மலர் வணிகர்கள் கூறியதாவது:  ஆலங்குடி, கொத்தமங்கலம், வடகாடு போன்ற பகுதியில் இருந்து விவசாயிகள் இங்கு  மலர்களை கொண்டு வருகின்றனர். அதை ஏலத்தில் வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் சாகுபடி குறைந்து போனதால் மல்லி, செண்டி மல்லி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பூக்களின் விலை  உயர்ந்துள்ளது. கொரோனா பொது முடக்கம் காரணமாக  விவசாயத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  இதனால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பூக்களின் சாகுபடி குறைந்துவிட்டது என்றனர்.(poto by...delux ganasekaran)

Top