logo
ஆலங்குடியில் சமூக விலகலை கடைபிடிக்காத 30 கடலை ஆலைகள் மூடல்.

ஆலங்குடியில் சமூக விலகலை கடைபிடிக்காத 30 கடலை ஆலைகள் மூடல்.

22/Apr/2020 06:33:37

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் சமூக விலகலை கடைபிடிக்காமல் இயக்கப்பட்டு வந்த சுமார் 30 கடலை ஆலைகளை மூட புதன்கிழமை (ஏப்.22)அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 ஆலங்குடியில் இயங்கிவந்த 50-க்கும் மேற்பட்ட கடலை ஆலைகள் ஊரடங்கு உத்தரவின் காரணமாக   மூடப்பட்டன. இதனால், விவசாயிகள் தாங்கள் விளைவித்த கடலைகளை விற்க முடியாமல் பெரும் சிரமத்திற்காளாகி வந்தனர். இந்நிலையில், விவசாயம், விவசாயம் தொழில்களுக்கு ஊரடங்கில் அரசு தளர்வு அளித்தது. இதைத்தொடர்ந்து, ஆலங்குடியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கடலை ஆலைகளை அதிகாரிகள் இயங்க அனுமதித்தனர். தொடர்ந்து, புதுகை, தஞ்சை மாவட்டத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆலங்குடிக்கு வந்து சென்றனர். அதில், முக கவசங்கள் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஏராளமானோர் ஆலைகளில் திரண்டனர். இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, ஆலங்குடி வட்டாட்சியர் கலைமணி தலைமையிலான அதிகாரிகள் கடலை ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பெரும்பாலான ஆலைகள் சமூக விலகலை கடைபிடிக்காததால், இயங்கிவந்த 30 ஆலைகளையும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் வரை ஆலைகளை மூட வட்டாட்சியர் உத்தரவிட்டார். தொடர்ந்து அனைத்து கடலை ஆலைகளும் மூடப்பட்டன.


Top