logo
மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு பெறும் அரசின் எண்ணம் நிறைவேறும்: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நம்பிக்கை

மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு பெறும் அரசின் எண்ணம் நிறைவேறும்: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நம்பிக்கை

22/Oct/2020 10:50:49

ஈரோடு:  மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான  7.5 சதவீத உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசின் எண்ணம் நிச்சயம் நிறைவேறும்  என நம்பிக்கை தெரிவித்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும்  அவர் கூறியது:  க்கள் நலன் சார்ந்த தேவைகளை முதல்வர் நிறைவேற்றி வருகிறார்.மழைகாலம் என்பதால் குடிமராமத்து பணியால் பயன் கிடைத்துள்ளது.குளம் குட்டைகள் நிரம்பி வருகின்றன.

 தமிழகத்தில் தொழில் வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஏழை மாணவர்கள் பொருளாதாரத் தில் பின் தங்கியுள்ள மாணவர்கள் இந்த ஆட்சியில் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். நீட் தேர்விற்காக 426 மையங்களில் 6 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது..இதில் பயின்ற அரசு மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம், 303 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு  கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

நீட் தேர்வு உள்ளிட்ட பயிற்சி அளிக்க தனியார் அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப் படாது. ரூ. 57லட்சம்  நீட் பயிற்சிக் காக 412 மையங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன் அரசு சார்பில் செலவு செய்யப்பட்டுள்ளது. 7.5 சதவிகிதம் உள் இடஒதுக்கீட்டில் தமிழக அரசின் எண்ணம் நிச்சயம் நிறைவேறும் என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

முன்னதாக, கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட புள்ளப்பநாயக்கன் பாளையம், ஒடையாக்கவுண்டன் பாளையம், கோபிசெட்டி பாளையம் நகராட்சி ஆகிய பகுதியில் சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் செயல்படுத் தப்பட்ட, ஊராட்சி மன்ற கட்டிடம், குடிநீர் திட்டம்  போன்ற நலத்திட்டப் பணிகளை  அமைச்சர் திறந்து வைத்தார். கோபிசெட்டி பாளையம் நகராட்சிக்குள்பட்ட ஐயப்பா நகரில் அமைந்துள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவில் 600 மரக்கன்றுகள் நட்டு வைத்து சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார்.

 அதனைத்தொடர்ந்து, சாரதா மாரியம்மன் கோயில் அருகே அமைந்துள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற விழாவில் 185 நெசவாளர்களுக்கு பாதுகாப்பு அடையாள அட்டைகளை  அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். 

Top