logo
தோனிமடுவு பாசனத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி சமத்துவ மக்கள் கட்சியினர் மனு

தோனிமடுவு பாசனத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி சமத்துவ மக்கள் கட்சியினர் மனு

19/Oct/2020 11:01:09

ஈரோடு:அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் சின்னசாமி, வடக்கு மாவட்ட செயலாளர் குருநாதன் ஆகியோர் தலைமையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் ஈரோடு ஆட்சியர்  அலுவலகத்திற்கு வந்து அங்குள்ள புகார் பெட்டியில் மனுவை செலுத்தியஅந்த மனுவிவரம்:

மேட்டூர் வட்டம், கொளத்தூர் ஒன்றியம், பெரிய தண்டா வனப்பகுதியில் ஓடும் தோனிமடுவு பள்ளத்தாக்கில் ஒரு சிறிய தடுப்பணை கட்டி அந்த தண்ணீரை அரசு அமைத்துள்ள அகழிகள் வழியாகவும் இயற்கையாக வரும் பள்ளங்கள் வழியாக திருப்பி விட்டால் கொளத்தூர் அந்தியூர் பவானி பகுதியில் உள்ள ஏரிகள் குளங்கள் நிரம்பி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.எனவே தோனிமடுவு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

நூற்றாண்டு விழாவை நோக்கி சென்று கொண்டிருக்கும் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் சுற்று சுவர் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. தற்போது இந்த மைதானம் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் இருப்பிடமாக மாறி வருகிறது. இந்த நிலையை மாற்றிட இங்கு நிரந்தரமாக சுற்றுச் சுவர் அமைத்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் கிசான் திட்டத்தில் மோசடி செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேட்டூர் ரோட்டை இருவழிப் பாதையாக மாற்ற வேண்டும் நாச்சியப்பா வீதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென  அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். வடக்கு மாவட்ட அவைத் தலைவர் செல்வகுமார், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் பழனிச்சாமி உள்பட பல நிர்வாகிகள் உடனிருந்தனர். 


Top