logo
ஈரோட்டில் கட்டுமானத் தொழிலாளியின் வீட்டு பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

ஈரோட்டில் கட்டுமானத் தொழிலாளியின் வீட்டு பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

18/Oct/2020 06:14:33

ஈரோடு:  46 புதூர், நொசிகட்டுவலசு வள்ளி கார்டன் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம்(60). இவரது மனைவி அம்சவள்ளி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் நாமக்கல்லில் திருமணமாகி அங்கு உள்ளார். மகன் ஆந்திராவில் வேலை பார்த்து வருகிறார். பரமசிவம் சென்ட்ரிங் தளவாடப் பொருட்கள் வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார்.

அந்தப் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் இவர்கள் தினமும் இரவில் மாடியில் உள்ள அறையில் தூங்குவது வழக்கம். அதேபோல் நேற்று இரவும் மாடியில் உள்ள அறையில் தூங்கிவிட்டு இன்று காலையில் கீழே சென்றபோது அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று  வீட்டின் அறையிலிருந்த பீரோ  திறக்கப்பட்டு இருந்ததும், உள்ளே வைத்திருந்த 15 பவுன் நகை, ரூ.1லட்சத்து 7 ஆயிரம்  ரொக்கநி திருடு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவறிந்த  தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.  முதற்கட்ட விசாரணையில் கீழ் அறையில் ஆள் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் திட்டமிட்டு நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. 

திருட்டு நடந்த வீட்டில் சிசிடிவி கேமரா இல்லாததால் போலீசார் அந்த பகுதியில் வேறு யார் வீட்டிலாவது சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்பதை பார்த்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை பரிசோதனை செய்து வருகின்றனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Top