logo
காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தை  விரைவில் முதல்வர் அடிக்கல் நாட்டி தொடக்கிவைக்கவுள்ளார்-  அமைச்சர்  டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்

காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தை விரைவில் முதல்வர் அடிக்கல் நாட்டி தொடக்கிவைக்கவுள்ளார்- அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்

16/Oct/2020 05:33:58

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், லெட்சுமணம்பட்டியில் மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தலைமையில்  நடைபெற்ற நிகழ்வில், கூட்டுறவுத்துறையின் சார்பில் அம்மா நகரும் நியாய விலைக்கடையினை இன்று (16.10.2020)  தொடங்கிவைத்து அமைச்சர் பேசியதாவது:

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் பல ஆண்டு கால கனவு திட்டமான காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்ட பணிகளுக்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்பொழுது பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி விரைவில் அடிக்கல் நாட்டி தொடக்கி வைக்கவுள்ளார்.

 பொது மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலேயே அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் திறக்கப்படும் என முதல்வர் 110 விதியின் கீழ் ஏற்கனவே அறிவித்திருந்தார். 

அதன்படி, புதுக்கோட்டை  மாவட்டத்திற்கு 100 நகரும் நியாய விலைக்கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டு வருகிறது.  தற்போது லெட்சுமணம்பட்டியில் அம்மா நகரும் நியாய விலைக்கடை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இது ஏற்கெனவே சின்னபாண்டுராபட்டி தாய் அங்காடியில் 422 குடும்ப அட்டையில் இருந்து 148 குடும்ப அட்டைகள் தனியாக பிரித்து நகரும் நியாய விலைக்கடை அங்காடியாக செயல்பட உள்ளது. இதன்மூலம் இப்பகுதி பொதுமக்கள் 2.5 கி.மீ தூரம் சென்று பொருட்கள் பெற்று வந்த நிலை மாறி தங்களது இருப்பிடங்களிலேயே தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இனிபெற முடியும். 

 மேலும், விராலிமலை சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், விராலிமலை வட்டாட்சியர் அலுவலகம், விராலிமலை முருகன் கோவிலுக்கு மலைப்பாதை, காவிரி கூட்டுக்குடிநீர்த்திட்டம் போன்ற எண்ணற்ற நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் பல ஆண்டு கால கனவு திட்டமான காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.  இத்திட்டத்தின் முதற்கட்ட பணிகளுக்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்பொழுது பணிகள் நடைபெற்று வருகிறது தமிழகமுதல்வர் விரைவில் அடிக்கல்நாட்டி . இத்திட்டத்தை தொடக்கி வைக்கவுள்ளார்.

இத்திட்டம் நிறைவேற்றப்படும்போது புதுக்கோட்டை மாவட்டம் செழிப்பான மாவட்டமாக மாறுவதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்.  காவிரி-வைகை-குண்டாறு திட்டம் எதிர்கால தலைமுறை போற்றும் சிறப்பான திட்டமாகும். எனவே தமிழக அரசின் இதுபோன்ற நலத்திட்டங்களை பொதுமக்கள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என்றார் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர். 

பின்னர், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், விளாப்பட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள மகளிர் சுயஉதவிக்குழு கூட்டமைப்பு கட்டடத்திற்கான பூமி பூஜையினை துவக்கி வைத்து, களத்துப்பட்டியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டிலும், மாங்குடியில் ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்ட புதிய தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளையும் திறந்து வைத்தார். 

மேலும், கே.நாங்குப்பட்டி, எஸ்.மேலப்பட்டி, பிச்சைதேவன்பட்டி, ரோட்டாத்துப்பட்டி, புதுப்பட்டி, குள்ளம்பட்டி, சாரணக்குடி ஆகிய கிராமங்களில் அம்மா நகரும் நியாய விலைக்கடைகளை துவக்கி வைத்தும், இராசநாயக்கன்பட்டியில் தரம் உயா;த்தப்பட்ட கால்நடை மருந்தகத்தினையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் எம்.உமாமகேஸ்வரி, கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் இளங்கோவன், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர்  டெய்சிகுமார், ஒன்றியக் குழுத்தலைவர்ம.காமுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

Top