logo
ஈரோடு எம்எல்ஏ-க்கள் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

ஈரோடு எம்எல்ஏ-க்கள் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

12/Oct/2020 04:09:06

 ஈரோடு: ஈரோடு அதிமுக. மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் மேற்கு தொகு எம்எல்ஏ. கே.வி.ராமலிங்கம், கிழக்கு தொகுதி எம்எல்ஏ-கே.எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலையில், திமுக உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த  60-க்கும் மேற்பட்டோர்  தாங்கள் இருந்த கட்சியிலிருந்து  விலகி அதிமுகவில் இணைந்தனர். 

அதிமுவில் இணைந்த அனைவருக்கும் எம்எல்ஏ-க்கள் சால்வை அணிவித்து கட்சி உறுப்பினர் அட்டைகளை  வழங்கினர்.

நிகழ்ச்சியில், பகுதி செயலர்கள் கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஷ், தங்கமுத்து, கோவிந்தராஜ், ஜெயராஜ், ஆவின் துணைத் தலைவர் குணசேகரன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச்செயலாளர் மாதைய்யன், காவேரி செல்வம் நடராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Top