logo
அக்.13-இல் பிரதமரின் கொரோனா மக்கள் இயக்கத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

அக்.13-இல் பிரதமரின் கொரோனா மக்கள் இயக்கத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

11/Oct/2020 10:42:46

புதுக்கோட்டை: பாரத பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க கொரோனா விழிப்புணர்வு மக்கள் இயக்கமாக மாற்றப்பட உள்ளது. இதற்கான திட்டத்தை தூத்துக்குடியில் வரும்  13-ஆம் தேதி தமிழக முதல்வர் தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவித்தார்  சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(11.10.2020) மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தலைமையில்  நடைபெற்ற நிகழ்வில், இயற்கை வேளாண் உற்பத்தியாளர் சங்க விவசாயிகளுக்கு ரூ.21 லட்சம் மதிப்புள்ள  கடனுதவிக்கான காசோலையையும்விராலிமலை பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதி ரூ. 4 லட்சத்துக்கான காசோலையையும் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வழங்கினார்.

 பின்னர்  அமைச்சர் சி.விஜயபாஸ்கர்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: விழாக்காலங்கள் மற்றும் பண்டிகைகள்   இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளை   பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்அண்டை மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பது இதைவிட பெரிய சவாலாக இருக்கிறது. எனவே, தமிழகத்தில் பொதுமக்கள் மிகவும் கவனமாக  இருக்க வேண்டும்.

தமிழக முதல்வரால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையின் காரணமாக கொரோனாவின்  தாக்கம் கட்டுக்குள் வைத்திருக்ப்பட்டுள்ளது. அதிக அளவில் ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனை தமிழகத்தில் தான்  செய்யப்பட்டு வருகிறது தினந்தோறும் 90 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகிறது.தமிழகத்தில் கொரோனாவின்  தாக்கம் 10 சதவீதத்திற்கும் குறைவாக கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் இரண்டாவது அலை என்று கூறப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் கொரோனா பாசிடிவ் சதவீதம் தமிழகத்தில் குறைந்துள்ளது.பிளாஸ்மா சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை முறைகள் நல்ல முறையில் தமிழகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு நோயாளிகள் பூரண குணமடைந்து வருகின்றனர். தாமதமாக மருத்துவமனைக்கு வருபவர்களை  காப்பாற்றுவது சவாலாக உள்ளது.இன்றைக்கு 5 லட்சத்து 96 ஆயிரம் பேர் கொரானாவிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். இதை மிகப்பெரிய சாதனையாக கருத வேண்டும்.

 தமிழகத்தில்  கடந்த வாரம் கொரோனாவால் இறந்தவர்களின் சதவீதம் 1.6 ஆக இருந்தது ஆனால்  தற்போது 1.3 சதவீதமாக  குறைந்துள்ளது. மருத்துவர்கள் மிகப்பெரிய சாதனை படைத்து வருகின்றனர். அண்டை மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழக எல்லையில் அண்டை மாநிலத்திலிருந்து  வருபவர்களை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.சென்னையில் இரவு நேரங்களில் கொரோனா  பரிசோதனை மருத்துவ முகாம் தொடங்கப்பட உள்ளது.

பாரத பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க கொரோனா விழிப்புணர்வு மக்கள் இயக்கமாக மாற்றப்பட உள்ளது தமிழக முதல்வர் இந்த திட்டத்தை தூத்துக்குடியில் வரும்  13-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார் என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.               

Top