logo
அதிமுக வழிகாட்டுக்குழுவில் இடம் பெறாதது மகிழ்ச்சி- அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

அதிமுக வழிகாட்டுக்குழுவில் இடம் பெறாதது மகிழ்ச்சி- அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

10/Oct/2020 11:36:53

அதிமுக வழிகாட்டு குழுவில் இடம்பெறாதது மகிழ்ச்சியாக உள்ளது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே..செங்கோட்டையன் கூறினார்.

கோபி அருகில் உள்ள அக்கரைகொடிவேரி ஊராட்சியில் ஆதிதிராவிடர் வசிக்கும் குக்கிராமங்கள்  மேம்பாடு திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல், ஜல்ஜன் திட்டத்தில் குடிநீர் வழங்குதல் என ரூ. 3 கோடியே 48 லட்சம் மதிப்பில் திட்டங்கள், பெரிய கொடிவேரி பேரூராட்சியில் ரூ.1.67 கோடி மதிப்பில் சந்தை மேம்பாடு பணிகளின்தொடக்க விழா நடைபெற்றது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே..செங்கோட்டையன் கலந்து கொண்டு, பணிகளை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளகளிடம் மேலும் அவர் கூறியதாவது: கொரோனோ பணியில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் பாராட்டி உள்ளார். ஒரு முதல் அமைச்சரை பாராட்டும் அளவிற்கு அனைத்து துறைளின்செயல்பாடுகளும் தமிழகத்தில் சிறப்பாக நடந்து வருகிறது.

 கட்டாய கல்வி திட்டத்தில் இன்னும் மாணவர்களை சேர்க்க மாணவர்கள் சேர கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு  முதல் இது வரையிலும் ரூ.943 கோடி வழங்கப்பட்டுள்ளதுஇந்த ஆண்டு வழங்க வேண்டிய தொகை ரூ.372 கோடி ரூபாய். இதை வழங்குவதற்கான பரிசீலனை நிதித்துறையில் உள்ளது.

எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளுக்கு மத்திய அரசு நிதி வழங்குவதில்லை. இப்போது புதிய கல்வி கொள்கையில் வழங்கலாம் என்று மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. பிற மாநிலங்களில் தமிழ்வழி பள்ளிகள் மூடுவது குறித்து அந்தந்த மாநில முதல் அமைச்சர் மற்றும் பிரதமரிடம் பேசி, முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார். மஹாராட்டிரா மாநிலத்தில்  தமிழ் பள்ளிகள் ஊக்குவிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கட்டாய கல்வி திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.370 கோடி தர வேண்டியுள்ளது.   .தி.மு.. வழிகாட்டு குழுவில் இடம் பெறாததது மகிழ்ச்சியாக உள்ளது. கொடிவேரி அணையின் அழகை சிறுவர்கள் கூட பாதுகாப்பாக நின்று பார்ப்பதற்கு தேவையான மேடை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே..செங்கோட்டையன் கூறினார்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்டஊராட்சிகுழுதலைவர் நவமணிகந்தசாமி, டி.என்.பாளையம் ஒன்றிய .தி.மு-. செயலாளர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Top