logo
கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கிய உணவு ஊட்டச்சத்து, உபகரணங்கள் வழங்கும் விழா

கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கிய உணவு ஊட்டச்சத்து, உபகரணங்கள் வழங்கும் விழா

08/Oct/2020 06:11:53

புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஆரோக்கிய  ஊட்டச்சத்து உணவு மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

புதுக்கோட்டை அருகே  மேலத்தேமுத்தம்பட்டி கிராமத்திலுள்ள அங்கன்வாடி மையத்தில் சங்கத் தலைவர் மருத்துவர் ப.தனசேகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகப்  மருத்துவர் ஸ்ரீதர் பங்கேற்று,  ரூ.20 ஆயிரம் மதிப்பிலான  புரோட்டீன் பவுடர், ஊட்டச்சத்து மாவு, டானிக் போன்ற ஊட்டச்சத்து உணவு வகைகள், சோப்பு, துண்டு, குழந்தைகளுக்கு தேவையான முகப்பவுடர், டெட்டால், கிருமி நாசினி  அடங்கிய தொகுப்பு பைகளை கர்ப்பிணிகள் 20 பேருக்கு  வழங்கினார்.

நிறைவாக சங்க செயலாளர்  வி.என்.எஸ்.செந்தில் நன்றி கூறினார். கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக  அரசு  வழிகாட்டுதலின் படி சமூக இடைவெளி கடைப்பிடிக்கப் பட்டு அனைவரும் முகக்கவசம் அணிந்து தனி மனித இடைவெளியுடன் இந்நிகழ்ச்சி  நடத்தப்பட்டது 


Top