logo
ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் ஆக்கிரமிப்பு பகுதியில் மறு அளவீடு  பணி

ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் ஆக்கிரமிப்பு பகுதியில் மறு அளவீடு பணி

08/Oct/2020 12:31:00

ஈரோடு, கனிராவுத்தர் குளத்தில் பெரும்பகுதியை தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிகள், கட்டிடங்களை மறு அளவீடு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

 ஈரோடு, கனிராவுத்தர் குளத்தில் பெரும்பகுதியை தனியார் ஆக்கிரமிப்பு செய்து, கட்டிடம் கட்டி, மக்கள் வசிக்கின்றனர். அக்கட்டிடங்களுக்கு மாநகராட்சியில் அனுமதி பெறாமல் கட்டியதாகவும், குளத்தின் நீர் நிலைப்பகுதியில் அவை உள்ளதால், பாதுகாப்பு கருதி அவற்றை அகற்ற வேண்டும், ன கனிராவுத்தர் குளம் மீட்பு கூட்டியக்கம் வலியுறுத்தி வருகிறது.

அத்துடன்  காத்திருப்பு போராட்டத்தையும் அறிவித்தனர்.இதையடுத்து, நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில்,கடந்த வாரம்ஆர்.டி.ஓ. சைபுதீன், வட்டாட்சியர் பரிமளாதேவி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், கூட்டியக்கத்தினர் பங்கேற்ற  ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து, அவ்வளாகம் நில அளவையாளர்களால்  மறு ஆளவீடு  செய்யும் பணி நடைபெற்றது. இப்பணியை வட்டாட்சியர்  பரிமளாதேவி, மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதுபற்றி, கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் நிலவன் கூறியதாவது: ஆர்.டி.ஓ., சைபுதீன், குளப்பகுதி, ஆக்கிரமிப்பு கட்டடங்கள், கரை பகுதியை ஆய்வு செய்தார். நில அளவையாளர் மூலம் அளவீடு செய்ய துவங்கினர்.கடந்த, 2015-இல் டி.ஆர்.ஓ., பிறப்பித்த உத்தரவுப்படி, குள ஆக்கிரமிப்பு கட்டடங்கள், பிற அமைப்புகள் அகற்றப்பட வேண்டும். குளத்தை முழுமையாக அளந்து, குளம் மற்றும் ஆக்கிரமிப்பு பகுதியை தனித்தனியாக குறித்து, கல் நட்டு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

இப்பணிகள் நிறைவு பெறும் வரை, வேறு எந்த பணிகளையும் மாநகராட்சி உள்ளிட்ட எந்த துறையினரும் செய்யக்கூடாது என கேட்டுக் கொண்டுள்ளோம். இப்பணிகளை முழுமையாக செய்து முடிப்பதாக, ஆர்.டி.ஓ. உறுதியளித்துள்ளார். அளவீடு தொடர்ந்து நடக்கிறது. விரைவில், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.


Top