logo
அரிமளத்தில் டாஸ்மாக் கடைகளை அகற்றகோரி  மறியலில் ஈடுபட்ட  38 பேர் கைது

அரிமளத்தில் டாஸ்மாக் கடைகளை அகற்றகோரி மறியலில் ஈடுபட்ட 38 பேர் கைது

02/Sep/2021 11:52:47

புதுக்கோட்டை, செப்:  புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் இரண்டு டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 38 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரிமளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இக்கடைகளால் பொதுமக்கள் தினந்தோறும் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். போதைக்கு அடிமையாகி பல குழும்பங்கள் சீரழிந்து வருகின்றனர். பல பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

டாஸ்மாக் கடைகளினால் மக்கள் பல வகைகளிலும் அவதிப்பட்டு வரும் வேளையில் மேலும்இ ஒரு டாஸ்மாக் கடையை அரிமளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் தகவல் அரிமளம் பகுதி மக்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால்இ ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மேற்படி இரண்டு கடைகளை அகற்றக் கோரியும்இ புதிதாக டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மார்க்சிஸ்;ட் கம்யூனிஸ்ட் கட்சினர் தலைமையில் வியாழக்கிழமையன்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரிமளம் மார்க்கெட் பகுதியல் நடைபெற்ற போராட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஜி.நாகராஜன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி நாம் தமிழர் கட்சி நிர்வாகி முருகன், பசுமை மீட்புக்குழு நிர்வாகி குமார் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.அடைக்கப்பன்இ ஆர்.வி.ராமையா, மணி, அடைக்கன், பழனியப்பன் உள்ளிட்டோர் பேசினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த மறியல் போராட்டத்தில் 20 பெண்கள் உட்பட 38 பேரை போலீசார் கைது செய்தனர்.


Top