logo
ஈரோடு பஸ் நிலையத்தில் முக கவசம்  அணியாமல் வந்த பஸ்  டிரைவர்கள்,  பயணிகளுக்கு அபராதம் விதிப்பு

ஈரோடு பஸ் நிலையத்தில் முக கவசம் அணியாமல் வந்த பஸ் டிரைவர்கள், பயணிகளுக்கு அபராதம் விதிப்பு

27/Aug/2021 08:23:34

ஈரோடு, ஆக: ஈரோடு பஸ் நிலையத்தில் இன்று முக கவசம்  அணியாமல் வந்த பஸ்  டிரைவர்கள்,  பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த ஒரு வாரமாக கொரோனா தினசரி பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில், பஸ்களில் பயணம் செய்யும் பெரும்பாலான பயணிகள் முக கவசம் அணிந்து வருவதில்லை புகார் எழுந்தது. இதையடுத்து இன்று துப்பரவு ஆய்வாளர் கண்ணன் தலைமையில் அதிகாரிகள் ஈரோடு பஸ் நிலையத்திற்கு வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பஸ்களில் ஒரு சில பயணிகள் முக கவசம் சரியாக அணியாமல் வந்து இருந்தது தெரிய வந்தது.

அவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. இதைப்போல் முக கவசம் அணியாமல் வந்த பஸ் நடத்துனர், டிரைவர் ஒருவருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் முக கவசம் அணியாமல் ஒரு சில பயணிகள் பஸ் ஏற வந்தனர் அவர்களுக்கு பஸ்சில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து முக கவசம் அணியாமல் வரும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கும் பணி நடந்து வருகிறது. 11 மணிவரை 10 -க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Top