logo
வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக்கோரி மனித சங்கிலி போராட்டம்:புதுக்கோட்டையில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக்கோரி மனித சங்கிலி போராட்டம்:புதுக்கோட்டையில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

09/Aug/2021 11:55:03

புதுக்கோட்டை, ஆக:  மோடி தலைமையிலான ஒன்றிய அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்களை சீர்குலைக்கக்கூடாது. தேசிய வேலை உறுதித் திட்டத்தில் ரூ.600 கூலி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடுமுழுவதும் திங்கள்கிழமைய மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு), அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் எஸ்.சங்கர், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராமையன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் ஆகியோர் தலைமை வகித்தனர்.

 சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் எம்.ஜியாவுதீன், சி.அன்புமணவாளன், ஏ.பாலசுப்பிரமணியன், எஸ்.தேவமணி, திரவியராஜ், ரெத்தினவேல், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் எஸ்.பொன்னுச்சாமி, எஸ்.பீமராஜ், ஆர்.சி.ரெங்கசாமி, விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கே.சண்முகம், எம்.சண்முகம், ஏ.செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.


Top