logo
ஈரோட்டில் மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்கம்

ஈரோட்டில் மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்கம்

07/Aug/2021 07:45:06


ஈரோடு, ஆக:  ஈரோட்டில் மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர்  அலுவலக வளாகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பில் தேசிய கைத்தறி தினத்தையொட்டி, மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி  தொடங்கி வைத்து, நெசவாளர் சங்க உறுப்பினர்களுக்கு கடனுதவிகளை வழங்கினார். 

பின்னர், மாவட்ட ஆட்சியர்  ஹெச்.கிருஷ்ணனுண்ணி; தெரிவித்ததாவது, 1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ஆம் நாள் அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கைத்தறித் தொழிலை மேம்படுத்தி கைத்தறி நெசவாளர்களின் வருவாயை உயர்த்தவும் அவர்களின் பெருமையை அதிகரிக்கவும் தேசிய கைத்தறி தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

தேசிய கைத்தறி தினவிழாவையொட்டி மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 188 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும், 50 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும் என மொத்தம 238 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.

இம்மாவட்டத்திலுள்ள இந்த 238 சங்கங்களில் 59,681 கைத்தறி நெசவாளர்களும் மற்றும் 7,132 விசைத்தறி நெசவாளர்களும் உள்ளனர், கைத்தறிகளில் பெட்ஷீட், துண்டு, படுக்கை விரிப்பு, தலையணை உறை, திரைச்சீலை, சால்வை, ஜமுக்காளம் மற்றும் சேலை ஆகிய இரகங்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

கைத்தறி கண்காட்சியில் கோவிட்-19 வழிமுறைகளை பின்பற்றி ஈரோடு மாவட்டத்திலுள்ள 15 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் கலந்து கொண்டுள்ளனர். அனைத்து கைத்தறி ஜவுளி இரகங்களுக்கும் தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள 20 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

நெசவாளர் குடும்ப ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஈரோடு சரகத்தில் 365 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். நெசாவாள் முதியேர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 6609 உறுப்பினர்கள் பயன்பெற்று வருகிறார்கள். 2021-2021-ம் ஆண்டில் 755 பயனாளிகள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு பயன்பெற்று வருகின்றனர். 

மகாத்மா காந்தி புங்கர் பீமா யோஜனா திட்டத்தின் கீழ்  6887 உறுப்பினர்களும், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம் மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 12968 உறுப்பினர்களும், நெசவாளர் நல்வாழ்வு காப்பீட்டு திட்டத்தின் கீழ் 19106 நெசவாளர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடான ரூ.360 கோடியில் இதுவரை சுமார் ரூ,283.01 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன மூலம் சுமார் 6500 ஜவுளி உற்பத்தியாளர்கள் விற்பானையாளர்கள் மற்றும் 15,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து, முத்ரா திட்டத்தின் கீழ் ஈ.எச்.107 ஸ்ரீராம் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தைச் சார்ந்த 4 உறுப்பினர்களுக்கு ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுவு வங்கி, பெருந்துறை கிளையின் மூலம் தலா ரூ.50,000ஃ- வீதம் ரூ.2 இலட்சம் மதிப்பில் கடனுதவிகளை வழங்கினார்.

இதில், ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)  திட்ட இயக்குநர் பிரத்திக் தயாள், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.பி.முருகேசன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இணை இயக்குநர்கள் தமிழரசி, .நடராஜ், உதவி இயக்குநர் ரவிகுமார் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Top