logo
 பிரதமர் படம் வைக்கக்கோரி  மோடியின் படத்துடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பாஜகவினர்

பிரதமர் படம் வைக்கக்கோரி மோடியின் படத்துடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பாஜகவினர்

05/Aug/2021 10:03:50

புதுக்கோட்டை, ஆக:  அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரதமர் படத்தை வைக்கக்கோரி  மோடியின் படத்துடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பாஜகவினர் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை பாஜக  தொழில் பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் பாஜக வினர்  50 க்-கும் மேற்பட்டோர் பிரதமர் படத்தை ஆட்சியர் அலுவலகம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும்  வைக்க வேண்டும் என வலியுறுத்தி மோடியின் படத்துடன்    ஆட்சியர் அலுவலகத்தில் மோடியின் படத்தை பொருத்துவதற்காக திரண்டு வந்தனர். அவர்களை திருக்கோகர்ணம் போலீசார் தடுத்து நிறுத்தி ஆட்சியர் அலுவலக வளாரகத்திற்கு உள்ளே செல்ல  அனுமதி மறுத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

இதையடுத்து போலீசார், அவர்களுடன் பேச்சு நடத்தி 5 பேரை மட்டும், மாவட்ட ஆட்சியரை சந்திப்பதற்காக உள்ளே அனுமதித்தனர்.   பிரதமர் மோடியின் படத்தை வைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர். அரசு விதிப்படி இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் உறுதி அளித்தார்.

இது குறித்து பாஜகவினர் கூறியதாவது, அரசு அலுவலகங்களில் முதலமைச்சர் படங்கள் பொருத்தப்பட்டிருக்கும் போது  நாட்டை ஆளும் பாரத பிரதமரின் புகைப்படம் அரசு அலுவலகங்களில் இல்லாதது குறித்து பாஜக சார்பில் கடந்த ஒரு வருட காலமாக  கோரிக்கை விடுத்து வருகிறோம்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பிரதமர் படத்தை வைக்க வேண்டுமென்று மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி பல போராட்டங்களும் நடத்தப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பழைய முதல்வரின்  படம் அகற்றப்பட்டு, புதிய முதல்வர்  மு.க. ஸ்டாலின் படம் பொருத்தப்பட்டுள்ளது.  ஆனால், தற்போதும் பிரதமரின் படம்  வைக்கப்படாதது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தனர்.


 

Top