logo
பொதுமக்கள் புகார் குறித்து அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ் அப் எண்ணிற்கு  200 புகார்கள்: ஈரோடு மாநகராட்சி  தகவல்

பொதுமக்கள் புகார் குறித்து அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ் அப் எண்ணிற்கு 200 புகார்கள்: ஈரோடு மாநகராட்சி தகவல்

04/Aug/2021 11:59:31

ஈரோடு, ஆக: ஈரோடு மாவட்டத்தில்பொதுமக்கள் புகார் குறித்து அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ் அப் எண்ணிற்கு  200 புகார்கள் வந்துள்ளதாக  ஈரோடு மாநகராட்சி  தகவல் தெரிவித்துள்ளது.

 பொது மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது அந்த கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அனைவரின் கோரிக்கைகளும் விடப்படாமல் பதிவு செய்கின்ற வகையில், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய 9489092000 என்ற வாட்ஸ்அப் எண், கடந்த 20 -ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.

 ஈரோடு மாநகராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் பொது சுகாதாரம் தெருவிளக்கு சாலை மற்றும் மழைநீர் வடிகால் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் தொடர்பான குறைகளை அவ்வப்போது பெறப்பட்ட உடனுக்குடன் சரி செய்யும் வகையில் வாட்ஸ் அப்  ஏற்படுத்தப்பட்டு இருந்தது. வாட்ஸ்அப் எண் மூலம் பெறப்படும் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு அதன் விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் பிரச்னைகள் குறித்து வாட்ஸ் அப்பில் புகார் செய்து வருகின்றனர். இதற்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. பெரும்பாலும் சுகாதாரம், தண்ணீர் பிரச்சனை, குப்பை  பிரச்னை இது தொடர்பாக தான் அதிக புகார்கள் வருகிறது.

இதுகுறித்து, ஈரோடு மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன் கூறியதாவது: மாநகர் பகுதி மக்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து நேரடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு வராமல் அவர்கள் ஸ்மார்ட் போன் மூலமாக தங்கள் பிரச்னைகள் குறித்து தெரிவிக்கும் வகையில் வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த வாட்ஸ் அப் பெண்ணிற்கு பொதுமக்கள் ஏராளமான புகார்களை தெரிவித்துள்ளனர். 

இதுவரை 200-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. பொதுமக்களிடம் வாட்ஸ் அப் மூலம் புகார் பெற்றதும் நாங்கள் பெற்றுக் கொண்டோம் என்று பதிலுக்கு அவர்களுக்கு மெசேஜ் மூலம் பதில்  அனுப்பி விடுகிறோம்.

பெரும்பாலும் சுகாதாரம் சம்பந்தமான பிரச்னைகள் தான் அதிக அளவில் வருகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தகவல் பரிமாறிக் அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது என்றார் அவர்.

Top