logo
தமிழகத்தில் புதிதாக 5,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் புதிதாக 5,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

04/Oct/2020 06:43:15

தமிழகத்தில் இன்று (அக்.4-ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 5,489 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், குணமடைந்தோர், பலியானோர் பற்றிய புள்ளி விவரங்கள்  அடங்கிய செய்திக் குறிப்பை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 5,489 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,348 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,19,996 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய  தகவலின்படி,  கொரோனா பாதித்த மேலும் 66 பேர் (அரசு மருத்துவமனை -37, தனியார் மருத்துவமனை -29)  பலியாகியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 9,784 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், ஒரேநாளில் 5,558 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,64,092 பேர் குணமடைந்துள்ளனர். 46,120 பேர் இன்னும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று 86,012 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 77,00,011 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 


Top