logo
புதுக்கோட்டை பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் டாக்டர் முத்துலெட்சுமி  அம்மையாரின்136 -ஆவது    பிறந்தநாள் விழா

புதுக்கோட்டை பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் டாக்டர் முத்துலெட்சுமி அம்மையாரின்136 -ஆவது பிறந்தநாள் விழா

30/Jul/2021 01:38:24

புதுக்கோட்டை, ஜூலை:   புதுக்கோட்டை பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் நாட்டின் முதல் பெண் டாக்டர் முத்துலெட்சுமி  அம்மையாரின்136 -ஆவது     பிறந்த நாள் விழா தங்கம் பல் மருத்துவமனையில்  நடைபெற்றது.

விழாவுக்கு, பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் துரை மணி தலைமை  வகித்தார். புதுக்கோட்டை மாவட்ட நூலக வாசகர் வட்டத்தலைவர் கவிஞர்  தங்கம் மூர்த்தி கலந்துகொண்டு  டாக்டர்முத்துலெட்சுமி  அம்மையாரின் உருவப்படத்திற்கு மாலைஅணிவித்து மலர் தூவிமரியாதை செய்தார் .

தங்கம் பல் மருத்துவமனை   மருத்துவர் தங்க அருண்புஷ்பராஜ்,   ஏழை மாணவ மாணவியருக்கு கல்வி உதவி தொகை வழங்கி  வாழ்த்தினார்.   முன்னதாக  துணைஆளுனர் ஆர். கருணாகரன் வரவேற்றார். நிறைவாக  செயலாளர்  பாஸ்கர் நன்றிகூறினார். பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கநிர்வாகிகள்  ராஜேந்திரன் , சரவணபவன் ஆதித்தியன் மற்றும் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள்  உள்பட திரளானோர்   கலந்து கொண்டனர். 


Top