logo
ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்  திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

28/Jul/2021 10:09:36

ஈரோடு, ஜூலை:  ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்  திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக அதிமுக நிர்வாகிகள் அவரவர்கள் வீடுகள் முன்பு சமூக இடைவெளி கடைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி   ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் வீரப்பன்சத்திரத்தில்  மாநகர் மாவட்டச் செயலாளரும் ,முன்னாள் அமைச்சருமான கே.வி. ராமலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

முன்னாள் எம்.எல்.ஏ. கே .எஸ். தென்னரசு,  பகுதி செயலாளர் கேசவமூர்த்தி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் வீரக்குமார், பகுதி செயலாளர் ஜெயராமன், மாணவரணி மாவட்ட இணைச்செயலாளர் யுனிவர்சல் நந்தகோபால் உள்பட பலர் பங்கேற்றனர். 

ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் கருங்கல்பாளையம் செக்காய்தோட்டம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு  எம்.ஜி.ஆர். மன்ற மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான கே.எஸ்.தென்னரசு தலைமை  வகித்தார்.  துணை செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

இதில் நீட் தேர்வு ரத்து,  பெட்ரோல் விலை குறைப்பு போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க.வை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல், ஈபிபி நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் துணை மேயர் கே .சி. பழனிச்சாமி தலைமை வகித்தார்.

இதேபோல், அந்தந்த பகுதி செயலாளர்கள் சூரம்பட்டி ஜெகதீஷ், ஜெயராஜ் ,கோவிந்தராஜ், தங்கமுத்து, ராமசாமி, முன்னாள் மேயரும், மாவட்ட மகளிர் அணி செயலாளருமான மல்லிக பரமசிவம் ஆகியோர் தலைமையில் அந்தந்த பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 


Top