logo
ஈரோடு மாவட்டத்தில் வாக்குச்சாவடி அடிப்படையில் 9,050 பேருக்கு தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் வாக்குச்சாவடி அடிப்படையில் 9,050 பேருக்கு தடுப்பூசி

28/Jul/2021 06:41:02

ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டத்தில் வாக்குச்சாவடி அடிப்படையில் 9,050 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ஆவதும்அலை வேகம் எடுத்துள்ளது.இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். உயிர் இழப்பும் அதிகமாக இருந்தது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்டது. தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் நள்ளிரவில் குவிய தொடங்கி விடுவதால்  முதலில் வரும் நபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் டோக்கன் கொடுத்து தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இதனால் பின்னால் வந்த மக்களுக்கு தடுப்பூசி கிடைக்காமல் போனது. 

இதனை தடுக்கும் வகையில் கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் வாக்காளர் பட்டியல் அடிப்படையில், அந்தந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று டோக்கன்கள் வழங்கி தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி, ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட ஈரோடு கிழக்கு, மேற்கு தொகுதியில் 18 ஓட்டுச்சாவடியில் 40 வார்டு பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு தலா 150 முதல் 200 பேருக்கு கோவிஷில்டு தடுப்பூசி போடப்பட்டது. இதேபோல் தாளவாடி புளியம்பட்டி கொடுமுடி மொடக்குறிச்சி அந்தியூர் கோபி பவானி பெருந்துறை இப்படம் மாவட்டம் முழுவதும் உள்ள 181 முகாம்களில் கோவிஷில்டு தடுப்பூசி 50, 100 மற்றும் 150 பேருக்கு செலுத்தப்பட்டது.

செவ்வாய்க்கிழமை மட்டும் மாவட்டம் முழுவதும் 9,050 பேருக்கு கோவிஷில்டு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்குமான வார்டு எண்,  நிலை அலுவலர் பெயர், அவர்களுடைய தொலைபேசி எண்,  சூப்பர்வைசர் பெயர் அவருடைய போன் எண், அங்கு பணிபுரியும் டாக்டர் பெயர், மைய பொறுப்பாளர் பெயர், போன் எண் ஆகியவற்றை வெளியிட்டுள்ளனர். 

ஈரோடு மாவட்டத்தில் கோவேக்சின் தடுப்பூசி கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் இரண்டாம் தவணை செலுத்துவதற்காக ஏராளமானோர் காத்திருக்கும் நிலையில் மாவட்ட நிர்வாகமும்,  மாவட்ட அமைச்சரும் இப்பிரச்னை தீர்க்க  துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Top