logo
ஆலங்குடி தொகுதியில் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை அமைச்சர் மெய்யநாதன் தொடக்கி வைத்தார்

ஆலங்குடி தொகுதியில் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை அமைச்சர் மெய்யநாதன் தொடக்கி வைத்தார்

26/Jul/2021 11:58:03

புதுக்கோட்டை, ஜூலை:   புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை  சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் துவக்கி வைத்தார். 

பின்னர் அமைச்சர்  பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், மாஞ்சன்விடுதி ஊராட்சி, அம்பேத்கர் நகரில் ரூ.10.36 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், கோவிலூரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உணவுக் கூடம், கல்லாலங்குடியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள ஆழ்குழாய் கிணறு, கே.ராசியமங்களத்தில்  ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கம் ஆகிய பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கோவிட் தொற்று குறைக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொண்டு முன்மாதிரி தொகுதியாக மாற்ற தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பான ஆட்சியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொது மக்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள்  மேற்கொள்ளப்பட உள்ளது. 

தேர்தலின் போது  அறிவித்த வாக்குறுதிகளான அரசு நகரப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்தல், குடும்ப அட்டைதாரர்களுக்கு கோவிட் நிவாரண நிதி உதவி ரூ.4,000 ஆகிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், 14 வகையான மளிகைப் பொருட்கள் தொகுப்பும் வழங்கப்பட்டுள்ளது. ஏனைய வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையில் பல்வேறு தொழிற்சாலைகள் ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அரசின் ஆய்வுப் பணிகள் உள்ளிட்ட நிர்வாகப் பணிகளை வெளிப்படை தன்மையுடன் மேற்கொண்டு இந்தியாவின் சிறந்த முதல்வராக திகழ்கிறார்.என்றார் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

இதன் பின்னர், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், மேலப்பட்டு கிராமத்தில் அருள்மிகு சுப்பிரமணியர் கோவில் அருகில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள ஆழ்குழாய் கிணறு மற்றும் இதர பணிகள் அடிக்கல் நாட்டியும், பி.சி குடியிருப்பில் ரூ6.53 லட்சம் மதிப்பீட்டில் மண் சாலையை பேவர் பிளாக் சாலையாக அமைக்க அடிக்கல் நாட்டியும், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் ரூ.13.54 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டி பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.

இதில், வருவாய் கோட்டாட்சியர் .தண்டாயுதபாணி, ஒன்றியக் குழுத் தலைவர்வள்ளியம்மை தங்கமணி, ஒன்றியக் குழு துணைத் தலைவர் ஆனந்தி இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், சிங்காரவேலு, அசோகன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

 


Top