logo
புதுக்கோட்டையில் பள்ளி,  கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கு  இலவச கணினி பயிற்சி

புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கு இலவச கணினி பயிற்சி

25/Jul/2021 11:28:40

 புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டையைச் சார்ந்த  பள்ளி,  கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கு  இலவச கணினி பயிற்சி அளிக்கப்படுவதாக  ஹரிஷ்மாலை அறக்கட்டளை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, அந்த அறக்கட்டளை வெளியிட்ட தகவல்: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் பொதுமக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம்   பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் புதுக்கோட்டை ஹரிஷ்மாலை அறக்கட்டளை  மூலம் பள்ளி , கல்லூரி, மாணவ , மாணவிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு அணுகுவதற்கான இலவச அடிப்படைக் கணினி பயிற்சி வழங்குகிறோம்.

புதுக்கோட்டையில் இயங்கிவரும் ஹரிஷ்மாலை அறக்கட்டளை மூலம் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் அனைவருக்கும்  வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு  அடிப்படையான  கணினி பயிற்சி, எம்.எஸ்.ஆபீஸ், டேலி , போட்டோஷாப் .டி.டீ.பி ( MS OFFICE , TALLY, PHOTOSHOP, DTP) மற்றும், வேலைவாய்ப்பை பெறும் வகையில்   பயிற்சிகளையும் இலவசமாக அளிக்கப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளில் 10 -ஆம்  வகுப்பு,12 -ஆம்  வகுப்பு முடித்தவர்கள் அனைவரும் நேரில்  வந்து பெயரை பதிவு செய்து, மேற்கண்ட பயிற்சிகளில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இலவச கணினி பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் சாந்தநாதபுரம் 5 -ஆம் வீதியில் உள்ள, ஹரிஷ்மாலை கல்வி மற்றும் அறக்கட்டளை தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.  குறிப்பு  1,08.2021 முதல் 31.01.2022 வரை பயிற்சி வழங்கப்படும். தொலைபேசி எண்:  89460 00204, 04322 -231377. அரசு வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியுடன் இலவச கணினி பயிற்சி அளிக்கப்படும் என ஹரிஷ்மாலை அறக்கட்டளை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

Top