logo
புதுக்கோட்டை நகரில்  சனிக்கிழமை (17.7.2021) மின்தடை ஏற்படும்  இடங்கள் அறிவிப்பு

புதுக்கோட்டை நகரில் சனிக்கிழமை (17.7.2021) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு

16/Jul/2021 06:17:16

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டையில்  மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை(17.7.2021)  மின் வினியோகம் இருக்காது என மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக,  தமிழ்நாடு மின் வாரிய உதவி செயற்பொறியாளர்( இயக்கலும் & காத்தலும்) அ.சையதுஅகமதுஇஸ்மாயில் வெளியிட்ட தகவல்:  புதுக்கோட்டை 110 / 22 கே.வி / நகரியம் துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின் வினியோகம் நடைபெறும்,  சாந்தநாதபுரம், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சார்லஸ் நகர், கீழராஜவீதி, நிஜாம் காலனி,மார்த்தாண்டபுரம், சத்தியமூர்ததி நகர், அசாக் நகர், கலீப் நகர், மருப்பிணி ரோடு, திருவப்பூர், திருக்கோகர்ணம், திலகர் திடல், அம்பாள் புரம், அடப்பன் வயல், காமராஜபுரம், போஸ்நகர், கணேஷ்நகர் ஆகிய இடங்களில் (17.7.2021) சனிக்கிழமை  காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

Top