logo
பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 19 -ஆம் தேதி வெளியிடப்படுகிறது: அரசு அறிவிப்பு

பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 19 -ஆம் தேதி வெளியிடப்படுகிறது: அரசு அறிவிப்பு

16/Jul/2021 05:03:17

சென்னை, ஜூலை: மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு(2020-2021) தேர்வு முடிவுகள்  வரும் 19.7.2021 (திங்கள்கிழமை) வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  2020-2021ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் 19.7.2021 அன்று காலை 11.00 மணிக்கு வெளியிடப்படுகிறது. பள்ளி மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை பின் வரும் இணையதளங்கள் வாயிலாக தெரிந்து  கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

1. www.tnresults.nic.in 

2. www.dge1.tn.nic.in

3. www.dge2.tn.nic.in

4.www.dge.tn.gov.in 

Top