logo
தொலைக்காட்சி மற்றும் சமூகத் தொடர்பு ஊடக விவாதங்களில் அதிமுக இனி பங்கேற்காது: அதிமுக தலைமை அறிவிப்பு

தொலைக்காட்சி மற்றும் சமூகத் தொடர்பு ஊடக விவாதங்களில் அதிமுக இனி பங்கேற்காது: அதிமுக தலைமை அறிவிப்பு

14/Jul/2021 01:48:14


சென்னை, ஜூலை: இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பா எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:அதிமுக புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், சிறுமைப்படுத்தும் நோக்கிலும், களங்கத் ஏற்படுத்தும் விதத்திலும், விவாதத் தலைப்புகளை வைத்து நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சிகள் தொடர்ந்து நடத்துகின்றன.

இதனால், ஊடக விவாதங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செய்தித் தொடர்பாளர்கள் இனி யாரும் பங்கேற்க மாட்டார்கள். எங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு யாரையும் வைத்து பேசுவதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Top